உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாது: பிரதமர் மோடி சவால்

புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாது: பிரதமர் மோடி சவால்

போபால்: புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் என்னை ஆசீர்வதித்து வருகின்றனர். தாரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா தொழில்துறைக்கு புதிய ஆற்றலையும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான மதிப்பையும் வழங்கும். புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m6pekgmq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று பாகிஸ்தான் பயங்கரவாதி தனது துயரத்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்ததை தேசமும், உலகமும் பார்த்தது.

மண்டியிட செய்தது

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் சிந்தூரத்தை அகற்றினர். நாங்கள் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம். நமது துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிட செய்தது. பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும். பயங்கரவாதிகளை அவர்களின் சொந்த வீடுகளுக்குள் தாக்கும் புதிய இந்தியா இது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

25 கோடி மக்கள்

1948ம் ஆண்டு இதே நாளில், நமது ராணுவம் ஹைதராபாத்தை விடுவித்து இந்தியாவின் பெருமையை மீட்டெடுத்தபோது சர்தார் வல்லபாய் படேலின் உறுதியான மன உறுதி வெளிப்பட்டது. 140 கோடி இந்தியர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
செப் 17, 2025 18:54

பாகிஸ்தான் அணு ஆயுதத்தை வைத்து காங்கிரஸ் அரசை மிரட்டியது போன்று பிஜேபி அரசை மிரட்டலாம் என்று தப்பு கணக்கு போடக்கூடாது. சண்டைன்னு வந்துட்டா சட்டை கிழியத்தான் செய்யும். இந்தியா அணு ஆயுத போரை எதிர்கொள்ள எப்போதும் தயாராக உள்ளது. இந்தியா ஒரு பெரிய நிலப்பரப்பு. இந்தியா ஐந்து இடத்தில அணு ஆயுதம் போட்டாலே, பாகிஸ்தான் உலக மேப்பில் இருக்காது.


Vasan
செப் 17, 2025 17:29

இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் ஒவ்வொரு வீட்டு உபயோக பொருளுக்கும், நமது இந்தியாவிலேயே தயாரிக்க படும் இணையான பொருளின் பெயரை பிரபலப்படுத்த வேண்டும். That is equivalent domestic manufactured product to be made popular for each of the imported products. Jai Hind.


அப்பாவி
செப் 17, 2025 15:57

எப்போ அஞ்சியது?


SUBBU,MADURAI
செப் 17, 2025 16:07

அப்புசாமி ...னே உனக்கு எப்போதும் நக்கல் நையாண்டிதானா உனக்கு எப்பிட்றா உன் வீட்டில் கஞ்சி ஊத்துறானுக?


M Ramachandran
செப் 17, 2025 15:27

ராகுளுக்கும் விடியலுக்கும் அழுவாச்சியா இருக்கு.


M Ramachandran
செப் 17, 2025 15:18

ஆனால் ஐந்தாம் படை ராகுலுக்கும் அண்டர்க்ரவுண்ட் திருட்டு கட்சிக்கு பயந்து தானெ ஆகணும்.


Venugopal S
செப் 17, 2025 15:04

ஆனால் ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு மட்டுமே அஞ்சுவோம்!


SUBBU,MADURAI
செப் 17, 2025 16:10

ஏலே வேணு உன்னைய அடிச்சும் பாத்தாச்சு... பாத்தாச்சு நீ திருந்தவே மாட்டியா?


sri
செப் 17, 2025 16:45

super Subbu, Venu is not a human, all he knows only Critic Modi.Ji, he gets Rs200/- stipend from DMK party


Venugopal S
செப் 17, 2025 19:23

மூடர் கூட்டத்தைச் சேர்ந்த குருட்டு பக்தர்களுக்கு உள்ள கருத்து உரிமை எனக்கும் உண்டு நண்பரே!


MARUTHU PANDIAR
செப் 17, 2025 14:42

பப்பு என்னடான்னா எதோ ஒரு பேப்பரை கையில் வைத்து ஆட்டிக் கொண்டே என்னமோ பெரிய தப்பை கண்டுபிடிச்ச மாதிரி ரொம்ப உரக்க கத்தி சீன் போட்டுக்கிட்டு அலையுறார். என்னத்த சொல்ல?


Moorthy
செப் 17, 2025 14:32

ஹாப்பி பர்த் டே டு பி எம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை