உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்; நல்லது என்கிறார் பிரசாந்த் கிஷோர்!

சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்; நல்லது என்கிறார் பிரசாந்த் கிஷோர்!

புதுடில்லி: சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம் கொண்டு வருவதற்கு, ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதல் அமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இது குறித்து குறித்து, ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஏனெனில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதை உருவாக்கியவர்கள் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இவ்வளவு ஊழல்வாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மசோதா நல்லது

ஒரு தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர்களால் சிறையில் இருந்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால், இந்த மசோதா நல்லது என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

மசோதாவை படிக்கவில்லை!

இது குறித்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் நிருபர்களுக்கு கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை, இந்த மசோதா குறித்து உங்களுக்கு ஒரு கருத்தைச் சொல்லும் அளவுக்கு அந்த மசோதா குறித்து நான் இன்னும் படிக்கவில்லை.மேலோட்டமாகப் பார்த்தால் தவறு செய்தவர்கள் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறினேன். மசோதாவைப் படிக்காமல் நான் அதை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. இவ்வாறு சசிதரூர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஆக 21, 2025 14:00

நல்ல சட்டம் கூட கொடியவர்கள் கையில் கிடைக்கும் போது மோசமானதாக மாற்றப்படும். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் சட்டம் மோசமானது என்பதால் அல்ல, அதை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தான்!


Vellaichamy
ஆக 21, 2025 07:41

வரவேற்கப்பட வேண்டிய சட்டம்


M Ramachandran
ஆக 21, 2025 02:18

உண்மையான் இந்தியன் நாட்டின் நலன் பற்றி நேசிப்பவன்


M Ramachandran
ஆக 21, 2025 02:16

இதுதான் நாட்டை நேசிக்கும் குணமா?


M Ramachandran
ஆக 21, 2025 01:43

அரவிந் கேஜ்ரிவாலு தான் இந்த சட்டத்திற்கு முதல் காவு. உச்சிமோந்து பதவியில் வாரிசாக முடி சூட்டி மகிழ்ந்த தீய மு கா வை மேயய்க்கும் ஸ்டாலின் வயிற்றில் கடமுடா.


மனிதன்
ஆக 20, 2025 22:29

திரு. பிரசாந்த் கிஷோர் நீங்கள் முதல்வரானால், பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்கவேண்டும் அல்லது தலையாட்டி பொம்மையாகவாவது இருக்க வேண்டும்... இல்லையென்றால் நீங்களும் கூட சிறை செல்வீர்கள்... ஏன் ஏற்கனவே குற்றவாளிகளாக காவல்நிலையத்தில் FIR போடப்பட்டவர்களுக்கு சீட் இல்லை என்று பாஜக சொல்லுமா? இல்லை இல்லை அவர்களின் பதவிகள்தான் பறிக்கப்படுமா? அப்படி செய்தால் தொண்ணூறு சதவீத பாஜக MLA,MP, அமைச்சர்கள் அவர்களின் பதவிகளில் இருக்கமாட்டார்கள்... இதெல்லாம் இங்கே முட்டுக்கொடுக்கும் IT விங்கிற்கு தெரியாது...தெரிந்துகொள்ளவும் முயற்சிக்க மாட்டார்கள்...


vivek
ஆக 21, 2025 08:12

பார்த்து சிரிக்குது மனிதன்


naranam
ஆக 20, 2025 22:15

எங்கள் தீயமுக திராவிட விடியாத ஆட்சி முதல்வரும் அமைச்சர்களும் தொடை நடுங்குகிறார்கள்...


சோலை பார்த்தி
ஆக 20, 2025 22:01

bjp ஆட்சி அவங்களே இப்படி சட்டத்த கொண்டு வர்றாங்க. அப்டினா மடில கணம் இல்லை வழி ல பயம் இல்லை னு தான அர்த்தம்...


Ramesh Sargam
ஆக 20, 2025 21:56

சிறை செல்லும், சிறை தண்டனை அனுபவித்த முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என்றும் ஒரு சட்டம் இயற்றவேண்டும்.


Ramesh Sargam
ஆக 20, 2025 21:44

சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம். சிறப்பான சட்டம். உடனே நடைமுறைக்கு வரவேண்டும்.


சமீபத்திய செய்தி