மேலும் செய்திகள்
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்; பிரதமர் மோடி திட்டவட்டம்
46 minutes ago | 2
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
10 hour(s) ago | 7
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு புதிய நிர்வாக இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு மெட்ரோ ரயில்களில் தினமும் ஏழு லட்சத்துக்கும் அதிகமான பயணியர் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக, சொந்த வாகனங்களில் பயணிப்பதை பலரும் தவிர்ப்பதால், நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, பி.எம்.டி.சி., சார்பில் இணைப்பு பஸ்களும் இயக்கப்படுவதால், பயணியர் எண்ணிக்கை உயர்வதற்கு காரணமாக உள்ளது.கடந்தாண்டு, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு 8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், 10.8 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. மொத்தத்தில், 2023 மார்ச் முதல், டிசம்பர் வரை, ஒன்பது மாதங்களில் 450 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. இதற்கிடையில், மெட்ரோ நிறுவனத்துக்கு, அஞ்சும் பர்வேஜ் என்ற ஐ.ஏ.எஸ், அதிகாரிக்கு, கூடுதலாக நிர்வாக இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.இதனால், நிரந்தர நிர்வாக இயக்குனர் நியமிக்கும்படி, மத்திய நகர வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரியிடம், பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, சமீபத்தில் வலியுறுத்தினார்.இதன் அடிப்படையில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மகேஸ்வர ராவ் நேற்று நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 'இவருக்கு மாநில அரசு, எந்த கூடுதல் பொறுப்பும் வழங்க கூடாது என்றும், இடமாற்றம் செய்யும் பட்சத்தில் தங்கள் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்' என்றும் மத்திய அரசு, உத்தரவிட்டுள்ளது.
46 minutes ago | 2
10 hour(s) ago | 7