உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: இந்தியாவிலிருந்து 90 நாடுகளுக்கு ஏற்றுமதி

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: இந்தியாவிலிருந்து 90 நாடுகளுக்கு ஏற்றுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' 2023 - 24ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடி ஆக அதிகரித்துள்ளது. 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது,'' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.' மேக் இன் இந்தியா' திட்டம் துவக்கப்பட்ட 10வது ஆண்டில் இச்சாதனை படைக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்து துறைகளிலும் இந்தியாவை தன்னிறைவு பெற செய்ய வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. உலகளவில் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா எழுச்சி பெற்றுள்ளது. இன்று இந்திய ஆயுதப்படைகள் நம் மண்ணில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையும், தளவாடங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். 90 நாடுகளுக்கு பாதுகாப்பு கருவிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.2023 -24 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி 1.27 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஏற்றுமதி

ராணுவத்தை தயார்படுத்தும் நோக்கத்தில், சமீப நாட்களாக உள்நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. இந்த ஆண்டில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 21 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இதனை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Subash BV
செப் 26, 2024 14:11

NOTHING WRONG, WE ARE FOLLOWING WESTERNERS LOGIC. THEY ARE DEVELOPING LIKE THIS ONLY. PUT THE BHARATH FIRST.


N Sasikumar Yadhav
செப் 25, 2024 21:33

கையில் ஆயுதம் வைத்துக் கொண்டுதான் சமாதனம் பேசமுடியும் என்பதை கோபாலபுர கொத்தடிமைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை .


அம்புஜம்
செப் 25, 2024 17:45

இது போருக்கான நேரமில்கை ஹைன்னு வெளியில் பேச்சு சத்தம் பலமா கேக்குது.


hari
செப் 25, 2024 19:59

பாவம்...போலி பெண் பெயரில் ஒரு 200 ரூபாய் கொத்தடிமை


RAMAKRISHNAN NATESAN
செப் 25, 2024 20:42

அதுமட்டுமல்ல ..... வசுதைவ குடும்பகம் என்று கூட சொன்னார் .... ஒரே குடும்பம் என்று சொல்லிவிட்டு ஆயுதம் விற்பது முரனாகத் ஹொன்றலாம் .... நட்புநாடுகளுக்கு ஆயுதம் / தளவாடம் விற்பது நமக்கும் பாதுகாப்பு ..... அதற்காக தற்காப்புக்காக, ஆயுத, தளவாட உற்பத்தியெல்லாம் தவறு என்று சொல்ல முடியாது .... சிந்திக்கவே முடியாத அறிவாலய அடிமைகளால்...


N Sasikumar Yadhav
செப் 25, 2024 21:30

அப்பாவி பாமரன் என்ற வரிசையில் இப்போது பங்கஜம் என்ற கோபாலபுர கொத்தடிமை மூர்க்கம். கொண்டையை மறைக்க மறந்துட்டிங்களே


hari
செப் 25, 2024 17:20

கோயிலில் தேங்காய் ஒடச்ச உடனே ஓடி வரும் வேணுகோபால் எங்கே


சமீபத்திய செய்தி