மேலும் செய்திகள்
'தரமான தயாரிப்பு; குறைந்த விலை!' : மோடி
16-Aug-2025
புதுடில்லி: யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் இறுதி பட்டியலில் இடம்பெற முடியாத போட்டியாளர்களுக்காக, 'பிரதீபா சேது' என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த தளத்தின் மூலம் நுாற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது என, அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி, இதன், 125வது நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில் மோடி கூறியுள்ளதாவது: யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் மிகவும் கடினமானவை. குடிமைப் பணிகளில் சேர விரும்பும் பலர் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். கடின உழைப்பு அவர்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் ஊக்கமிக்க கதைகளை நாம் கேட்டிருப்போம். அந்த இளைஞர்கள் கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்தவர்கள். கடினமான உழைப்பு தான் அவர்களை குடிமைப்பணி சேவையில் சேர வைத்தது. அதே சமயம் யு.பி.எஸ்.சி., தேர்வு பற்றி மற்றொரு உண்மையும் இருக்கிறது. திறமைமிக்க ஆயிரக்கணக்கானோர் நம்மிடையே இருக்கின்றனர். அவர்களின் கடின உழைப்பும், யாருக்கும் சளைத்தது இல்லை. எனினும் ஒரு சிறிய இடைவெளியால், அவர்களால் இறுதி பட்டியலில் தேர்வாக முடியாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்ட போட்டியாளர்கள், பிற தேர்வுகளுக்காக மீண்டும் தங்களை முதலில் இருந்து தயார்படுத்த வேண்டியிருக்கிறது. இதனால், நேரமும், பணமும் விரயமாகிறது. அப்படிப்பட்ட திறன்மிக்க இளைஞர்களுக்காகவே, 'பிரதீபா சேது' என்ற பெயரில் டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் பொருட்கள் இந்த தளத்தில் அப்படிப்பட்ட இளைஞர்களின் தரவுகள் இடம்பெறும். அவர்கள் பற்றிய விபரங்களை பார்த்து, தனியார் நிறுவனங்கள் அவர்களை பணியமர்த்தலாம். நுாற்றுக்கணக்கானோர் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெறுவர். பண்டிகைகளின் போது, சுதேசி எனப்படும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாட்டு மக்கள் மறந்து விடக் கூடாது. பண்டிகைகளுக்காக உறவினர்களுக்கு பரிசளிக்க விரும்பினால், சுதேசி பொருளை பரிசளியுங்கள். ஆடைகள் என்றாலும், அலங்காரங்கள் என்றாலும், அவை நம் நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ராமாயணமும், இந்திய கலாசாரமும் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றிருக்கிறது. கனடாவின் மிஸ்ஸிஸாவ்காவில், 51 அடி உயர ராமரின் சிலையை காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஷ் யாவின் குளிர் பிரதேசமான விளாடிவாஸ்டோக்கில், ராமாயண கதைகளை விளக்கும் சித்திரங்களின் கண்காட்சி நடந்து இருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இப்படி, இந்திய கலாசாரத்தின் மீது ஈர்ப்பு வளர்ந்து வருவது மனதிற்கு உற்சாகத்தை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளதாவது: ப ருவகாலமும், இயற்கை பேரிடரும், நம் தேசத்தை சோதித்து வருகின்றன. இந்த பேரிடரை சமாளிக்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இரவு, பகலாக உழைத்து வருகின்றனர். இக்கட்டான தருணத்தில் இருந்து மக்களை காப்பாற்ற, பாதுகாப்பு படையினர், உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மாவட்ட நிர்வாகங்கள் என அனைவரும் ஒன்றாக கைகோர்த்திருக்கின்றனர். இயற்கை பேரிடரையும் கடந்து, சத்தமே இல்லாமல் ஜம்மு - காஷ்மீரில் இரு பெரிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஒன்று, புல்வாமாவில் முதல் முறையாக நடந்த பகல் - இரவு கிரிக்கெட் போட்டி. மற்றொன்று, ஸ்ரீநகரின் தால் ஏரியில் நடந்த கேலோ இந்தியா நீர் விளையாட்டு விழா. இந்த இரு விளையாட்டுப் போட்டிகளையும் திரளான மக்கள் கண்டுகளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
16-Aug-2025