உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழை நீர் கால்வாயில் சைக்கிள் பாதை ஆக்கிரமிப்பை தடுக்க புதிய திட்டம்

மழை நீர் கால்வாயில் சைக்கிள் பாதை ஆக்கிரமிப்பை தடுக்க புதிய திட்டம்

பெங்களூரு: மழைநீர் கால்வாயை ஆக்கிரமிப்பதை தடுப்பதற்காக, அதன் மீது சைக்கிள் பாதையும், பாதசாரிகள் நடந்து செல்லவும் பாதை அமைக்க, பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டம் வகுத்துள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரில், 842 கி.மீ.,க்கு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், பலர் பல இடங்களில் கால்வாயை ஆக்கிரமித்து, வீடுகள், வர்த்தக கட்டடங்கள் கட்டி உள்ளனர்.கடந்தாண்டு பெங்களூரு மாநகராட்சி, ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினர்.இந்நிலையில், வரும் நாட்களில் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில், 50 கி.மீ., நீளத்துக்கு, 200 கோடி ரூபாய் செலவில், பாதசாரிகள் நடக்க நடைபாதை, சைக்கிள் பாதை அமைக்க முடிவு செய்துஉள்ளது.'பிராண்ட் பெங்களூரு' சுமுகமான போக்குவரத்து திட்டத்தின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கால்வாய் செல்லும் பகுதியில் இடவசதிக்கு ஏற்ப, 7.50 மீட்டர் முதல் 10.50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும். இதில், பாதசாரிகள், சைக்கிள் பாதை உருவாக்கப்படும்.இதன் மூலம் கால்வாயில் குப்பை கொட்டுவதும் தவிர்க்கப்படும். வெள்ள தடுப்புக்கவும், கால்வாயில் வண்டல் மண் அகற்றவும் உதவியாக இருக்கும்.தற்போது நகரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, 1.20 கோடியை அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கூடுதல் வாகனங்கள், சாலைகளில் இயங்குகின்றன.தவிர, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீவிரமடைகிறது. மேம்பாலம் கட்ட வேண்டுமானால் அதிகளவில் நிதி தேவைப்படும். எனவே, மழைநீர் கால்வாயில் சைக்கிள் பாதை அமைக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ