உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய வருமான வரி திட்டத்தில் சலுகை: நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்வு

புதிய வருமான வரி திட்டத்தில் சலுகை: நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்வு

புதுடில்லி: மத்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரித் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, புதிய நடைமுறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

வருமான வரி தொடர்பான அறிவிப்புகள்

* வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும்.* அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கு ஒரே வரி முறை அறிமுகம் செய்யப்படும். இதுவரை இருந்த 2 வரி முறைகள், ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரி முறை நடைமுறைப்படுத்தப்படும்.* தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்படுவது இனி குற்றமாக கருதப்படாது.* இணைய வர்த்தகத்திற்கான டி.டி.எஸ் குறைக்கப்படும்.* நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.* குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீதம் குறுகிய மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.* அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி நடைமுறை ரத்து செய்யப்படுகிறது* இந்தியாவில் சொகுசு கப்பல் இயக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்படும்.

தனிநபர் வருமான வரி

* வருமான வரி செலுத்துவோரில் 3ல் 2 பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.* புதிய நடைமுறையில் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு* புதிய கணக்கு தாக்கல் முறையில் ரூ.3 லட்சம் வரை வருமான வரி பிடித்தம் கிடையாது.* ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை 5 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்* ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.* ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.* ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.* ரூ.15 லட்சத்திற்கும் மேல் 30 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

NATARAJAN RAMANATHAN
ஜூலை 26, 2024 08:02

Any rebate available for Senior Citizens and super senior citizens?


navaneethan rajan
ஜூலை 24, 2024 16:50

விலைவாசி ஏற்றத்திற்குரிய வரி குறைப்பு இல்லை . உச்ச பட்ச வருமான வரி 30% லிருந்து 25% ஆக கார்பொரேட் களுக்கு சமமாக குறைக்க வில்லை .அத்தியாவசிய உணவுக்கு வரி குரைப்பு இல்லை அனால் தங்கம் வெள்ளி பிளாட்டினம் . வைர போன்ற ஆடம்பர பொருட்களுக்கு சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது . எனவே இது பணக்காரர்களுக்கு உரிய பட்ஜெட் .ஏழைகளுக்கு உரிய பட்ஜெட் இல்லை .


T.sthivinayagam
ஜூலை 24, 2024 07:06

சலுகைகள் அதிகரிக்கபட்டுள்ளது அதானி அம்பானி முதல் நிதிஷ் நாயுடு வரை


Kasimani Baskaran
ஜூலை 24, 2024 05:26

கூடுதலாக 25000 சேமிப்பு. ஏஞ்சல் வரி நீக்கம் சிறப்பானது. அறநிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடையை பல பிரிவுகளாக பிரிக்காமல் ஒருங்கிணைத்து இருப்பது இன்னும் சிறப்பு.


Kundalakesi
ஜூலை 24, 2024 02:10

கூலித் தொழிலாளர்கள் கூட குறைந்தது 750 ஒரு நாள் சம்பாதிக்கிறார்கள். பாவம் நடுத்தர வர்க்கம் தான் பல்வேறு சுமைகளின் நடுவில் இந்த வருமான வரி வேறு


Kundalakesi
ஜூலை 24, 2024 02:00

உண்மையாக கூறினால் இந்த வருமான வரியை கண்டாலே எரிச்சல் வருகிறது. காட்டும் வரிக்கு உண்டான உள்கட்டமைப்பு வசதி இல்லை. கோவையை எடுத்துக்கொண்டால் படு மோசமான சாலை மற்றும் அளவிற்கு அதிகமான வாகனங்கள், காற்று மற்றும் ஒலி மாசு. இதற்கு தீர்வு இல்லையா. எப்பொழுது மெட்ரோ வரும்? ரயில் ன, விமான நிலைய விரிவாக்கம் கிடப்பில் உள்ளது


Sck
ஜூலை 23, 2024 21:39

இன்னய்யா தமிழாக்கம் பண்றீங்க. நிலையான கழிவுனா என்னது? நிலையான கழிப்பு அல்லது சரிதிட்டமான கழிப்பு. கழிவு என்பதற்கான அர்த்தமே வேறு.


Krishnamurthy Venkatesan
ஜூலை 23, 2024 21:04

வரி அதிகம் வசூலிக்கிறார்கள் என்றுதானே ஆங்கிலேயரை எதிர்த்து கட்டபொம்மன் போராடினான். உப்புக்கு வரி கொடுக்க மாட்டோம் என்றுதானே உப்பு சத்தியாகிரஹ போராட்டத்தை காந்தி மஹான் நடத்தினார். இப்போதெல்லாம் பட்ஜெட் வந்தாலே வயிற்றை கலக்கிறது.


Mohan
ஜூலை 23, 2024 20:42

புதிய வருமான வரி முறையை தேர்ந்து எடுப்பவர்களுக்கு, அவர்களது ஆண்டு வருமானம் 8.25 இலட்சத்திற்கு உள்ளாக இருப்பின் அவர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை.


Nagarajan S
ஜூலை 23, 2024 19:31

சென்ற பட்ஜெட் இல் ஏழு லக்ஷம் வரை வருமான வரி இல்லை என்று கூறிய நிதி அமைச்சர் தற்போது மூன்று லக்ஷ்த்திற்கு மேல் ஏழு லக்ஷம் வரை ஐந்து சதவிகிதம் வரி விதித்திருக்கிறாரே இது மத்திய மாநில மற்றும் ஐ டீ கம்பெனி ஊழியர்களையும், மற்ற கார்பொரேட் கம்பெனி ஊழியர்களையும், ஓய்ஊதியம் பெறுபவர்களையும் மிக அதிகம் பாதிக்கும்.


Mohan
ஜூலை 23, 2024 20:36

பட்ஜெட் அறிவிப்பின் படி இந்த வருடம் 8.25 இலட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி