உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அச்சு ஊடகங்களே அதிகப்படியான நம்பகக்தன்மை வாய்ந்தவை; மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டு!

அச்சு ஊடகங்களே அதிகப்படியான நம்பகக்தன்மை வாய்ந்தவை; மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இன்றைய ஊடகங்களில், அச்சு ஊடகங்களே அதிகபட்ச நம்பகத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன,'' என மத்திய ரயில்வே, செய்தி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி: பயங்கரவாதத்திற்கு எதிராக, அதிக கவனம் செலுத்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதால், இந்தியா தார்மீக ரீதியாக உயர்ந்த நிலையைப் பெற்றது. உலகம் இந்தியாவை மிகவும் பொறுப்பான நாடாகவும், பொருளாதார ரீதியாக உயர்ந்து வரும் நாடாகவும் பார்க்கிறது.

ஒருமித்த கருத்து

நமது பிரதமரின் வெளியுறவுக் கொள்கை கோட்பாடு பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது. உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர்களும், சமூக வலைதளங்களில் அரசுக்கு கூடுதல் பொறுப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.இது தொடர்பாக பார்லி நிலைக்குழு பல முறை விவாதம் நடத்தியது. உறுப்பினர்களுக்குள் ஒருமித்த கருத்தும் இருக்கிறது.

பொறுப்பேற்க வேண்டும்

தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு, அந்தந்த சமூக வலைதள நிறுவனங்கள் கூடுதலான பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒருமித்த கருத்து. அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் இத்தகைய கருத்தை ஏற்றுக்கொண்டால், சட்டத்தை மாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சமூக வலைதளங்களின் தாக்கம், சமுதாயத்தில் நேர்மறையானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது; அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கவும் வேண்டியுள்ளது. உண்மையில், அச்சு ஊடகங்கள் தான் இப்போது அதிகபட்சமான நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கின்றன.அரசியல் சட்டத்தின்படி நிர்வாகம் செய்யப்படும் இந்த நாட்டில் செயல்படும் நிறுவனங்கள் அனைத்தும், குறிப்பாக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்கள், நாட்டின் சட்டதிட்டங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mahendran Puru
ஜூலை 07, 2025 20:25

ஆமாங்க அமைச்சரே. அவர்கள்தான் சொன்னதை செய்கிறார்கள். சமூக ஊடகங்களில் நம்மை பற்றிய நாற்றத்தை வெளிக் கொணர்கிறார்கள். நம்ப முடியாது.


தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2025 19:51

சமூகவலை தளங்கள் ஆபத்தான போக்கை நோக்கி செல்கின்றன. ஒரு செய்தியை வெளியிட மத்திய அரசிடம் அனுமதி பெற்று லைசென்ஸ் வாங்கி தான் வெளியிட வேண்டும் என்று சட்டம் கொண்டுவரவேண்டும்.


Dr.Joseph
ஜூலை 07, 2025 17:04

அது ஒரு காலம்..... இப்பம் அப்படியல்ல நிறைய சொம்பு தூக்கி பத்திரிகைகள் உள்ளன......


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 14:07

அஸ்வினி சார் முரசொலி , தினகரன், நக்கீரன் படிக்காததால இப்படிப் பேசுறார்.


சமீபத்திய செய்தி