உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ நிகழ்வுகளை காண புதிய இணையதளம் துவக்கம்

ராணுவ நிகழ்வுகளை காண புதிய இணையதளம் துவக்கம்

புதுடில்லி : சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நிகழ்வுகளை நேரடியாக பார்ப்பதற்கான 'ராஷ்ட்ர பர்வ்' என்ற இணையதளம் மற்றும் அது தொடர்பான, 'மொபைல் போன்' செயலியை ராணுவ அமைச்சக செயலர் ராஜேஷ் குமார் சிங் நேற்று துவக்கி வைத்தார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் பிறந்த நாள், நாடு முழுதும் நல்லாட்சி தினமாக நேற்று கொண்டாடப்பட்டது.

நேரடி ஒளிபரப்பு

புதுடில்லியில், இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், 'ராஷ்ட்ர பர்வ்' அதாவது தேசிய திருவிழாக்கள் என்ற பெயரிலான இணையதளத்தை ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் துவக்கி வைத்தார். இதன் மொபைல் போன் செயலியும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:சுதந்திர தினம், குடியரசு தினம், முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் விழா உள்ளிட்டவை பொதுமக்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சிகள். இது போன்ற விழாக்கள் தொடர்பான விபரங்கள், நேரடி ஒளிபரப்பு, நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு, இருக்கை விபரங்கள், நிகழ்வுக்கான வழித்தடம் உள்ளிட்டவை குறித்து, இந்த வலைதளம் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும். ராணுவ அமைச்சகத்தால் துவங்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் மொபைல் செயலியில், குடியரசு தின நிகழ்வு பட்டியல், அணிவகுப்பில் இடம்பெறும் படைகள், அலங்கார ஊர்திகள் உள்ளிட்ட விபரங்களும் இடம்பெற்றிருக்கும். இந்த வலைதளத்தை www.rashtraparv.mod.gov.inஎன்ற முகவரி வாயிலாக அணுகலாம். எம் - சேவா எனப்படும் அரசு செயலி வாயிலாக, இதற்கான பிரத்யேக மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அஞ்சலி

சிறந்த நிர்வாகம், வெளிப்படைத் தன்மை, மக்கள் மற்றும் மத்திய அரசு இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை