உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளிதழ் விற்பனை அதிகரிப்பு: ஏ.பி.சி., அமைப்பு அறிக்கை

நாளிதழ் விற்பனை அதிகரிப்பு: ஏ.பி.சி., அமைப்பு அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நம் நாட்டில் நாளிதழ்களின் வினியோகம், கடந்தாண்டின் இரண்டாம் பகுதியை விட, நடப்பாண்டின் முதல் பகுதியில் 2.77 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ஏ.பி.சி., எனப்படும், பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. நம் நாட்டில் உள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்களின், 'சர்குலேஷன்' எனப்படும், வினியோகம் தொடர்பாக தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை, ஏ.பி.சி., எனப்படும், பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய் து வருகிறது. அதன்படி, 2025, ஜனவரி - ஜூன் வரையிலான காலக்கட்டத்திற்கான தணிக்கை அறிக்கையை ஏ.பி.சி., வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: கடந்தாண்டு, ஜூலை - டிச., வரை நாடு முழுதும் 2 கோடியே 89 லட்சத்து 41,876 நாளிதழ் பிரதிகள் விற்பனையாகின. 2025ன் முதல் பகுதியான ஜன., - ஜூன் வரை, 2 கோடியே 97 லட்சத்து 44,148 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இது, 8 லட்சத்து 2,272 பிரதிகள் அதிகம். கடந்த ஆண்டின் இரண்டாம் பகுதியை விட 2.77 சதவீதம் அதிகம். அதேபோல், வாராந்திர நாளிதழ்கள் 2024, ஜூலை - டி ச., வரையிலான காலக்கட்டத்தில், 16 லட்சத்து, 61,643 பிரதிகள் விற்கப்பட்டன. 2025, ஜன., - ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், 16 லட்சத்து 13,769 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இது, கடந்தாண்டு இரண்டாம் பகுதியை விட 2.88 சதவீதம் குறைவு. 'மேகசீன்' எனப்படும், வார, மாத பத்திரிகைகள், 2024, ஜூலை - டிச., வரை 3 லட்சத்து 34,713 பிரதிகள் விற்கப்பட்டன. இந்தாண்டில், ஜூன் மாதம் இறுதி வரை, 2 லட்சத்து 55,776 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இது, கடந்தாண்டு இரண்டாம் பகுதியை விட 23.58 சதவீதம் குறைவு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ديفيد رافائيل
செப் 11, 2025 10:54

நான் dinamalar website தான் daily one hour use பண்றேன். News paper வாங்கியே பல பல பல வருடங்களாச்சு.


சாமானியன்
செப் 11, 2025 06:32

விளம்பரங்கள் கூடியிருக்கு. சின்னப்பசங்க பொம்மை பார்க்க இந்த செய்தித் தாள்கள். ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் பெருகி உள்ளன. எது எப்படியோ, சில பத்திரிக்கை பக்கங்களை படிக்காமலேயே குப்பையில் போடுறாங்க. பழைய பேப்பர் பிசினஸ் வளர்ந்திருக்கு.


V Venkatachalam
செப் 11, 2025 01:57

இந்த 28941786 நாளிதழ் பிரதிகளில் முரசொலி ன்னு ஒண்ணை க.உ.பிஸ் எல்லாரும் கட்டுமரம் சமாதியில் தினமும் வைத்து பாலபிஷேகம் பண்றானுங்களே, அதுவும் சேர்த்தியா இல்லையான்னு இந்த செய்தியில் விளக்கமா இல்லீங்களே.அந்த தகவல் இல்லைங்குறதாலே கவலையா இருக்கு.


Anantharaman Srinivasan
செப் 11, 2025 00:48

நக்கீரன் துக்ளக் வார இதழ் சர்க்குலேஷன் எவ்வளவு..?


சமீபத்திய செய்தி