உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காப்பாற்ற அரசு அனைத்தையும் செய்கிறது; கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து!

காப்பாற்ற அரசு அனைத்தையும் செய்கிறது; கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து!

புதுடில்லி: ''ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா,36. ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கிளினிக்கில் பணியாற்றினார். அப்போது நிமிஷா பிரியாவுக்கு தலால் தொல்லை கொடுத்துள்ளார். 2017 ல் தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார். அதில், அதிகப்படியான மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் தலால் உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா சார்பில் முஸ்லிம் மத குரு ஒருவர் முன் நின்று பேச்சு நடத்திய நிலையில், ஜூலை 16ம் தேதி அவருக்கு நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், இன்று (ஜூலை 18) சுப்ரீம் கோர்ட்டில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடரமணி கூறியதாவது: ஏமனில் சிக்கலான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ராஜதந்திர ரீதியாக இந்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்றார். இதையடுத்து, ''ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது'' என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சாமி
ஜூலை 18, 2025 19:42

இவரை பத்தி முழு கதையை தெரிஞ்சவங்க வக்காலத்து வாங்க மாட்டாங்க


Natchimuthu Chithiraisamy
ஜூலை 18, 2025 17:21

வெளிநாட்டு கொலை வலக்கை ஆராயாமல், சுப்பிரிம் கோர்ட் ஒரு கொலை குற்றவாளிக்கு ஆதரவாக இருக்கும் போது உள்நாட்டில் நடக்கும் கொலை குற்றவாளிக்கு ஆதரவு சுதந்திரமாக கிடைக்கும் என்று விளம்பரம் செய்கிறது என்று யோசிக்கலாம்


Indian
ஜூலை 19, 2025 13:10

கொலை செய்யும் நோக்கம் இந்த பெண்ணுக்கு இல்லை . அவளை அந்த ஏமன் நாட்டு காரன் பல வகைகளில் துன்பப்படுத்தி பாஸ்போர்ட் பிடுங்கி வைத்து கொண்டான் . இவள் அவனிடம் இருந்து பாஸ்போர்ட் எடுக்க செய்த காரியம் தவறாக போய்விட்டது .. சும்மா வாய்க்கு வந்ததை எழுத வேண்டாம்.


Easwar Kamal
ஜூலை 18, 2025 16:36

இந்த பெண்மணி ஒரு கொலையாளி. தூக்கு தண்டனையில் இருந்து வேண்டுமானால் விடுவிக்கப்படலாம் அனல் கண்டிப்பாக சிறையில் இருக்க வேண்டும். இந்த மலையாளிகள் வளைகுடா நாட்டில் செய்கின்ற அயயோகித்தனம் கொஞ்சம்நஜமல்ல. இவர்களை தவிர வேறு எந்த மாநிலதவரும் தொழிலோ வேலையோ செய்வதை அனுமதிக்க மாட்டார்கள்..


Nallavan
ஜூலை 18, 2025 18:43

அந்த என்னோட நோக்கம் கொலை இல்லை. அவளோட பாஸ்ப்போர்ட்டை வச்சிட்டு அவளை கொடுமை படுத்துனவன் கிட்ட இருந்து, தன்னோட பாஸ்போர்ட மீட்டெடுக்க மயக்க மருந்து கொடுத்து அது ஓவர்டோஸ் ஆகிடுது. ஒரு பொண்ணு அந்த மாதிரி ஒரு மோசமான நாட்டுல மோசமான நிலைல இருக்கும் போது , குறைஞ்ச பட்சம் அவளுக்காக இரக்கமாச்சும் படணும். ஆண்டவன் கூடிய சீக்கிரம் அம்மாவையும் , பொண்ணையும் சேர்க்கட்டும்.


Indian
ஜூலை 18, 2025 16:19

எத்தனையோ கொடூர குற்றவாளிகள் , இந்த நாட்டில் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகிறார்கள் , ஆனால் இந்த பெண்ணின் கெட்ட நேரம் , மரணத்தை எதிர்நோக்கியிருக்கிறது ?


Mecca Shivan
ஜூலை 18, 2025 15:36

நீதிமன்றங்கள் இதை உணரவேண்டும்.. ஒருவேளை அவர் வெளிநாட்டில் துன்பறுத்தப்படுகிறார், கடத்தப்பட்டுள்ளார் அல்லது ஆவணங்களை இழந்து தவிக்கிறார் சம்பளம் கிடைக்கவில்லை என்றால் இதை தூதரகத்தை அணுகி அங்கு உதவி கிடைக்கவில்லை என்றால் இங்கு நீதி மன்றத்தை அணுகலாம். இது தெளிவான கொலை அல்லது எதிர்பாராமல் கொலையில் முடிந்த ஒரு சம்பவம் .. அந்த நாட்டின் சட்டமே செல்லுபடியாகும் ..


Senthoora
ஜூலை 18, 2025 16:40

சரி, அவர் இறந்தவர் செய்தது தவறு சரி என்றால் .இந்த நர்ஸ் அவருக்கு மயக்க ஊசிபோட்டார், ஓவர் டோஸ் போய்ட்டார், ஆனால் இவங்க இறந்ததும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போய் இருக்கனும். முடிந்தால் பாஸ்போர்ட் எடுத்து வேறுநாடு அல்லது இந்தியாவுக்கு பொய் இருக்கனும், ஆனால் ஏன் அவரை துண்டு துண்டாக வெட்டிபோடனும், அங்கேதான் இவரை அறியாமல் தப்பு பண்ணிட்டார், வெட்டாமல் இருந்திருந்தால், பணம் வாங்கிபாயாமலே இவரை மண்ணித்திருப்பாங்க.


V Venkatachalam
ஜூலை 18, 2025 15:01

இந்திய பிரஜைகள் வெளிநாட்டில் குற்றச்செயல்களில் ஈடு படுவதால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படையில் தேச பக்தி இருக்கிறதா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. என்னதான் பெண் என்றாலும் தன்னிலை உணர வேண்டும். ஏன் இவள் கணவனை அனுப்பி விட்டு தனியாக அங்கு தங்கினாள்? பிஸினஸ்ஸாக இருந்தாலும், சரிவரவில்லை என்றால் கிடைத்த வரை சரி என்று விற்பனை செய்து விட்டு கணவருடன் இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும் அல்லவா? அதை ஏன் செய்ய வில்லை. அந்த சந்தர்ப்பத்தில் இந்திய தூதரகத்தை அணுகி உதவி கேட்டிருந்தால் நல்ல அப்ரோச்சாக இருந்திருக்கும். கவுரவமாகவும் இருந்திருக்கும். இவையெல்லாம் தாண்டி இந்தியா உதவி செய்வதற்கு பாராட்டுகள்.


Indian
ஜூலை 18, 2025 16:22

சரியாக சொன்னீர்கள் , எல்லாம் கேட்ட நேரம் .


Ganapathy
ஜூலை 18, 2025 15:01

நமது உச்சநீதிமன்றத்தின் பல உத்திரவுகளை நமது மாநிலங்களே மதிப்பதில்லை. ஏமன் மதிக்குமா? ஏனிந்த வீணான நேரவிரயம் மக்களின் வரிச்செலவில்? எத்தனையோ கோடி கேசுகள் தேதிக்கு காத்திருக்கின்றன பல வருடங்களாக.


Ganapathy
ஜூலை 18, 2025 14:54

இங்கு பெண்ணியக்கம் பேசும் பெண்கள் யாரும் வாயே தொறக்கல. மதச்சார்பற்ற செகுலரிஸம் பேசும் எந்த நடிகையும் வாயே தொறக்கல.


Senthoora
ஜூலை 18, 2025 17:14

ஆமா அம்மா குசுபு அக்கா, வானதி அக்கா, இன்னும் இருக்கிறாங்க திமுகவால், அண்ணா திமுகவால், காங்கிரெஸ்ஸால் பாதிக்கப்பட்டால் வருவாங்க, மற்றவங்களுக்கு நோ.


N.Purushothaman
ஜூலை 18, 2025 14:45

முதலில் அந்த நாட்டு சட்டப்படி அவர் ஒரு கொலைக்குற்றவாளி ... அவர் கொலை செய்ய வேண்டும் என முனைப்பில் செய்யவில்லை என்றாலும் சம்மந்தப்பட்டவர் இறந்துவிட்டதால் அது கொலைக்குற்றமே .. இருந்தாலும் அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது .... ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க இந்த வழக்கு தகுதியானதா எனக்கேட்டால் நிச்சயம் இல்லை ..இருந்தாலும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது ...இது ஒரு தவறான முன் உதாரணம் ...


Indian
ஜூலை 18, 2025 14:08

பாஸ்போர்ட் பிடுங்கி வைத்தது , பணம் ஏமாற்றி பறித்து கொண்டது , பாலியல் ரீதியாக கொடுமை செய்தது ..... இவையெல்லாம் மிக தவறு ..ஏமன் ஒரு மோசமான நாடு ....பெண்ணிடம் கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை .... இந்த பெண்ணும் பாஸ்போர்ட் பெற சட்டரீதியாக அணுகி இருக்கலாம் , இந்திய தூதரகத்தை அணுகியிருக்கலாம் ....கெட்ட நேரம் , வேற என்ன சொல்ல ?, இனி எல்லாம் கடவுள் செயல் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை