மேலும் செய்திகள்
குரங்கம்மை அறிகுறிகளுடன் கேரளாவில் இளைஞர் அனுமதி
18-Sep-2024
மலப்புரம்: கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர், 'நிபா' பாதிப்பு ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இறந்த நபருடன், 267 பேர் தொடர்பில் இருந்த நிலையில், 177 பேர் முதன்மை பட்டியலில் உள்ளனர்; 90 பேர் இரண்டாம் நிலை பட்டியலில் உள்ளனர். இதில், முதன்மை தொடர்பு பட்டியலில் உள்ள 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் இருவருக்கு நிபா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் மலப்புரம் மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
18-Sep-2024