உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிபா வைரஸை விரட்டி அடிக்கணும்: கல்லூரிகள், தியேட்டர்கள் மூடல்; கேரளாவில் கட்டுப்பாடுகள் அமல்!

நிபா வைரஸை விரட்டி அடிக்கணும்: கல்லூரிகள், தியேட்டர்கள் மூடல்; கேரளாவில் கட்டுப்பாடுகள் அமல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நிபா வைரசால் உயிரிழந்ததை அடுத்து, பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் படித்து வந்தார். அண்மையில் அவர் தமது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். அடுத்த சில நாட்களில் தொடர்ந்து காய்ச்சல் இருக்கவே உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் இளைஞர் சேர்க்கப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iy3pdvk2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது நிபா வைரசால் பலியானது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸ் பரவலை தடுக்க களம் இறங்கும்படி சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

கட்டுபாடுகள் என்னென்ன?

நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வைரஸ் பரவல் தடுக்க இன்று (செப்.,16) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. * பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. * பொதுக்கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும். * பொதுமக்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். * 'தற்போது கவலைப்பட ஒன்றுமில்லை. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். தற்போது 3 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளால் சிகிச்சை பெற்று வருகின்றனர். * நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட திருவாலி ஊராட்சியில் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியையும் சுகாதாரத் துறையினர் நடத்தி வருகின்றனர். இதற்கு, அங்கன்வாடி பணியாளர்கள் அடங்கிய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vijay D Ratnam
செப் 16, 2024 21:44

இந்தியாவில் எந்த ஒரு வியாதி பரவ தொடங்கினாலும், அது கேரளாவில் தான் தொடங்குகிறது. ஏழு வருஷம் கழித்து இப்போ நிபா வைரஸ் மீண்டும் வருகிறது. 2017 - 2018 ஆம் ஆண்டில் இதே நிபா வைரஸ் கேரளாவில்தான் பரவ தொடங்கி கோழிக்கோட்டில் மட்டும் இருபது பேர் வரை பலி வாங்கியது. அடுத்து 2019 - 2020 ல் கொரோனா வைரஸ் அங்குதான் அமோகமாக வளர்ந்து பரவுகிறது. பன்றிக்காய்ச்சல், சிக்குன் குன்யா, மங்கி ஃபாக்ஸ் வரை இந்தியாவுக்கு இம்போர்ட் பண்ணி சப்ளை செய்வதை கேரளா வாடிக்கையாக செய்கிறது. மாட்டுக்கறி, வாத்துக்கறி, வாத்து முட்டை பன்றிக்கறி அதிகம் உட்கொள்ளும் மலையாள மக்கள் கொஞ்சம் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


Barakat Ali
செப் 16, 2024 16:26

ஏகன் இருக்கையில் எத்துன்பமும் இல்லை .... எச்சரிக்கை தேவை ........ அலட்சியம் வேண்டாம் ..........


சசிக்குமார் திருப்பூர்
செப் 16, 2024 15:35

உடனடியாக கேரளா எல்லையை மூடுவது தமிழகத்தில் நன்மை பயக்கும்


ஆரூர் ரங்
செப் 16, 2024 14:09

இக் கட்டுப்பாடுகள் சிவப்புக் கட்சி MEEடூ நடிகர்களுக்கு உண்டா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை