உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்,'' என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த 'எல்லைகளுக்கு அப்பால்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் காரணமாக, உலகம் முழுவதும் மோதல் சூழல் நிலவி வருகிறது. இந்த இரண்டு போர்களின் பின்னணியில் எந்த நேரத்திலும் 3ம் உலகப் போர் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்றைய போரில், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பொதுமக்கள் நேரடியாக குறிவைக்கப்படுகிறார்கள்.

சர்வாதிகாரம்

இதற்கெல்லாம் மத்தியில், மனிதகுலத்தைப் பாதுகாப்பது கடினமாகிவிட்டது. பெரும்பாலும் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இது ஒரு கடுமையான பிரச்னையை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த பிரச்னைகள் அனைத்தும் உலக அளவில் விவாதிக்கப்பட வேண்டும். வல்லரசுகளின் சர்வாதிகாரம், நல்லிணக்கம் மற்றும் அன்பை அழித்து வருகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக போரின் பரிமாணங்கள் மாறிவிட்டன.

புத்தரின் பூமி

ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. டாங்கிகள் மற்றும் பிற வகை விமானங்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது. உலகிற்கு உண்மை, அகிம்சை மற்றும் அமைதியை வழங்கிய புத்தரின் பூமி இந்தியா.இப்போது உலகம் முழுவதும் மோதல் சூழ்நிலை நிலவுகிறது. சர்வதேச முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, விவாதங்களுக்குப் பிறகு எதிர்காலக் கொள்கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஜூலை 07, 2025 20:32

இப்பவே அங்கங்கே நடந்துக்கிட்டேதானே இருக்கு?


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 07, 2025 19:53

உட்கட்சிப் பூசலைத் தான் இப்படி சூசகமாக சொல்றாராக்கும்


R.Sridhar
ஜூலை 07, 2025 19:16

உலகம் அழிந்து விடும். ஆகவே மொத்த வரியையும் நீக்கி விடவும். மக்கள் இருக்கும் வரை ஜாலியாக இருக்கட்டும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2025 18:42

மூன்றாம் உலகப்போருக்காக இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும். அதற்காக பத்து சதவீத பாதுகாப்பு வரி என்று ஜிஎஸ்டியை முப்பத்தெட்டு சதவீதமாக வசூலிப்பது நல்லது.


என்றும் இந்தியன்
ஜூலை 07, 2025 17:05

மூன்றாம் உலகப்போர் வராது. ஆனால் தீவிரவாதிகள் பணம் கொள்ளையடிக்க எங்கு வேண்டுமானாலும் போர் துவங்கும் இது உறுதி


Raa
ஜூலை 07, 2025 15:11

அப்பயாவது இந்தியா முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவீர்களா அமைச்சர் அவர்களே?


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 14:43

போரைத் தொடர அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் பணம் இருக்கிறதா என்ன? விரைவில் கையேந்தவேண்டிய நிலைமைதான். இப்போது உலகின் முக்கிய பிரச்சனை மூர்க்க பயங்கரவாதம்தான்


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 07, 2025 19:57

இந்துக்களுக்கு எப்ப பாரு பாதுகாப்பில்லைன்னு கலவரம் பண்ண கிளம்புற மூர்க்கர்களைத் தானே சொல்கிறீர்கள்?


subramanian
ஜூலை 07, 2025 13:05

அமெரிக்காவில் பொருளாதார, அரசியல் பிரச்னை, ரஷ்யா ஏற்கனவே உக்ரைனில் சண்டை, சீனா உள்நாட்டு குழப்பம், எப்போதும் ஆட்சி மாற்றம் வரலாம். எனவே மூன்றாம் உலக போர் வர வாய்ப்பு குறைவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை