உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு; முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு; முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா; பீஹாரில் அனைத்து துறை அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீஹாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கும் இந்த தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.இந் நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீஹார் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளதாவது; இதற்காக பீஹார் இளைஞர் ஆணையத்தை அமைக்கலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமைப்பானது மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அதிகாரம் பெற்ற, திறமையானவர்களாக மாற்ற ஆலோசனைகள் வழங்குவதே இந்த ஆணையத்தின் நோக்கம். மது, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை தடுக்க திட்டங்கள் வகுப்பதும் ஆணையத்தின் பணிகளாகும். மாநிலத்தில் அதிக பெண்கள் பணியிடத்தில் நுழைந்து ஆட்சி, நிர்வாகத்தில் பெரிய பங்கு வகிப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், இரு துணைத் தலைவர்கள், 7 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். அனைவருமே 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Narayanan Muthu
ஜூலை 08, 2025 19:38

மங்கிப்போன செல்வாக்கை தூக்கி நிறுத்தும் முயற்சி இது. ஏட்டு சுரைக்காய்


sundarsvpr
ஜூலை 08, 2025 17:04

பெண்கள் வேலைக்கு செல்லட்டும் விவாஹம் நடக்கும் வரை அல்லது தாயாகும் வரை, . பிறகு வேலைக்கு செல்வது சரியா என்பது சிந்திக்கவேண்டியது. குழந்தை வளர்ப்பை மூன்றாம் நபரிடம் விடுவதை பற்றி பெற்றோர் மட்டுமல்ல தாத்தா பாட்டிகள் ஒரு தீர்மானத்திற்கு வருவது நல்லது. வீட்டு பெண்ணிடம் மணைவிடம் கணவன் கலந்துதான் எல்லா முடிவுகளை எடுக்கிறான். ஒருமித்த உனர்விற்கு வருகின்றனர். இது மன மகிழ்ச்சி. மனைவி அடிமை என்று நினைக்கக்கூடாது. 90 % மனைவி சிந்தனைக்கு கணவன் விட்டுக்கொடுப்பான். இதுதான் தாம்பத்யம்


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 14:29

இப்படி ஒரு சலுகை இருக்கிறது என்பதை பெரும்பாலான பிஹார் பெண்களுக்கு புரிய வைக்கவே வெகுநாட்களாகும். அதிசயம் என்னவென்றால் அதிக IAS IPS அதிகாரிகளை உருவாக்கி வரும் இதே பிஹார்தான் மற்ற மாநிலங்களுக்கு அதிக அன்றாடக் கூலியாட்களை அனுப்பி வைக்கிறது.


சமீபத்திய செய்தி