உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் தே,ஜ., கூட்டணி முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார்!:   வெளிப்படையாக அறிவித்தார் பிரதமர் மோடி

பீஹாரில் தே,ஜ., கூட்டணி முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார்!:   வெளிப்படையாக அறிவித்தார் பிரதமர் மோடி

சமஸ்திபூர்: “ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் தான், பீஹார் சட்டசபை தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கிறது. முந்தைய தேர்தல்களை விட அதிக தொகுதிகளில் வென்று சாதனை படைப்போம்,” எனக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, 'நிதிஷ் குமார் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்' என்பதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 6ல், 121 தொகுதி களில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில், 11ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது; 14ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ., - எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளதால், பீ ஹாரில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது.

திமிர் பிடித்தவர்கள்

தே.ஜ., கூட்டணியில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., தலா, 101 தொகுதிகளில் போட்டியிடும் நிலையி ல், லோக் ஜனசக்தி 29 தொகுதி களில் களமிறங்குகிறது. எதிர்க்கட்சிகளின், 'மஹாகட்பந்தன்' கூட்டணியில், தொகுதி பங்கீடு ஒரே குழப்பமாக இருக்கிறது. 143 தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிடும் நிலையில், 60 தொகுதிகளில் காங்., களம் காண்கிறது. மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். முதலில் அவரை ஏற்க மறுத்த காங்., நிர்வாகிகள், பல கட்ட பேச்சுக்கு பின் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சஹர்சாவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், 'தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பா.ஜ.,வும் அவரை முதல்வராக்க விரும்பவில்லை' என்றார். இந்நிலையில், பீஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில், 'பாரத ரத்னா' கர்பூரி தாக்குர் பிறந்த கிராமத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று துவங்கினார். சமஸ்திபூர், பெகுசராய் ஆகிய மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது: தே.ஜ., கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. பீ ஹாரை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்ல அக்கட்சிகள் அயராது உழைத்து வருகின்றன.மஹாகட்பந்தன் கூட்டணி சிதறிக் கிடக்கிறது. அக்கூட்டணியில் ஒற்றுமை இல்லை. இவர்களா பீஹார் மக்களை காப்பாற்றப் போகின்றனர்? மக்கள் மீது துளிகூட அக்கறை இல்லாத காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி, எப்படி கொள்ளை அடிக்கலாம் என யோசித்து வருகிறது. 'மஹாகட்பந்தன்' என்பதற்கு பதில், 'மஹாலட்பந்தன்' என வைத்திருக்கலாம். கூட்டணியில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக் கொள்கின்றனர். இந்த கூட்டணியை பார்த்து நாடே சிரிக்கிறது. காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் ஊழல் நிறைந்தவர்கள்; ஜாமினில் வெளியே உள்ளனர். பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத போதும், கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாதவர்கள்; திமிர் பிடித்தவர்கள்.

புது உற்சாகம்

பீஹார் சட்டசபை தேர்தலை நிதிஷ் குமார் தலைமையில் தே.ஜ., கூட்டணி சந்திக்கிறது. முந்தைய தேர்தல்களை விட இந்த தேர்தலில் வரலாற்று வெற்றியை பெறுவோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நல்லாட்சியை வழங்குவதால், தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்கின்றனர். ஹரியானா, மஹாராஷ்டிராவே அதற்கு சான்று.லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியால் பீஹார் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களின் துன்பங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்தளவுக்கு வேதனையை அனுபவித்தனர். அந்த கஷ்டத்தில் இருந்து அவர்களை மீட்டது, தே.ஜ., கூட்டணி. இந்த தேர்தலில், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணிக்கு பெண்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, பார்லி.,யில் அக்கூட்டணி எதிர்த்ததை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கிடைத்ததை விட, மூன்று மடங்கு அதிகமாக மத்திய அரசின் உதவி பீஹாருக்கு கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் பீஹாரின் பல மாவட்டங்களில் பரவியிருந்த நக்சல், தற்போது திறம்பட கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டில் இருந்து நக்சல்கள் முற்றிலுமாக அகற்றப்படுவர். இது, மோடியின் உத்தரவாதம். மறைந்த காங்., தலைவர் சீதாராம் கேசரி, பீஹாரின் பெருமை. அவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்து காங்., தலைவரானார். ஆனால், காந்தி குடும்பத்தின் வற்புறுத்தலால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். இந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி நிச்சயம் வெல்லும். அதை பீஹார் மக்கள் நடத்தி காட்டுவர். இவ்வாறு அவர் பேசினார். தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், பிரதமர் மோடியின் நேற்றைய பேச்சு, ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Nathansamwi
அக் 25, 2025 19:52

அப்போ பீகார் முன்னேறின மாதிரி தான் ...இவ்ளோ நாள் நிதிஷ் ஆட்சி ல பாலம் உடைஞ்சு போனதுலாம் நம்ம ஜி கு தெரியாது போல ...


Rathna
அக் 25, 2025 11:45

லாலுவின் ஆட்சி காலத்தில் போடாத ஆட்டம் கிடையாது. கடைகளுக்கு தினமும் ஒரு ரவுடி கட்டணம், தொழிற்சாலைகளுக்கு ஒரு கட்டணம், வீட்டை புதுப்பித்தால் ஒரு தொகை, ஒரு வீட்டில் திருமணம் என்றால் ஒரு தொகை, மாடி கட்டிடத்தில் இருந்தால் ஒரு தொகை, பெண்கள் 5 மணிக்கு மேல் வர முடியாத நிலை. லாலுவின் உறவினர் ஒரு IAS அதிகாரியான மனைவியையே பல வருடங்கள் பலாத்காரம் செய்தது என்பது போன்ற கொடுமையான காட்டுமிராண்டி ஆட்சி நடந்தது. சாலை போட்டதாக, வாய்க்கால் வெட்டியதாக சொல்லி கணக்கு மட்டும் எழுதி சம்பாதிப்பது போன்றது நடந்தது. இந்திய வரலாற்றில் காட்டு ஆட்சி என்று அழைக்கப்பட்ட ஒரு ஆட்சி அது மட்டுமே ஆகும்.


ஆரூர் ரங்
அக் 25, 2025 11:41

பல ஆண்டுகளாக பிஜெபி பிகார் ஆட்சியில் பங்குபெற்றும் யோகி ஆதித்யநாத்,பட்னாவிஸ், சிவராஜ் அளவுக்கு ஒரு மாநிலத் தலைமையை உருவாக்கத் தவறிவிட்டது. அதனால்தான் வயது முதிர்ந்த நிதீஷ் இன்னும் தேவைப்படுகிறார்.


S Kalyanaraman
அக் 25, 2025 10:52

முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார்தான் என்று வெளிப்படையாக அறிவித்தரா? அவர் தலைமையில் தேர்தலை சந்திக்கிறோம் என்று மட்டுமே சொல்லியுள்ளார்.


பாமரன்
அக் 25, 2025 09:32

நாங்க இதை செஞ்சோம் இதெல்லாம் செய்யப்போறோம்னு சொல்லி ஓட்டு கேட்ட காலம் எப்படி... எப்ப பார்த்தாலும் அடுத்தவனை திட்டி தீர்த்து ஓட்டு கேட்கிறது எப்படி...????


vivek
அக் 25, 2025 12:01

நேராவே திமுகன்னு சொல்லு பாமராங்க....இருநூறு வேணாமா


Abdul Rahim
அக் 25, 2025 09:24

நிதிஷை முதல்வராக அறிவிக்கவில்லை என்றால் மைனாரிட்டி அரசு கவிழ்ந்து விடும் னு பயந்து போயி அறிவிக்கிறாங்க....


Keshavan.J
அக் 25, 2025 11:37

மைராரிட்டிக்கு மைனாரிட்டி பற்றி பேச என்ன தகுதி இருக்கு. எப்படி என்றாலும் திராவிட பார்ட்டிக்கு வோட்டு போட போறீங்க. பொய் போட்டுட்டு அடிமையா இருங்க.


பேசும் தமிழன்
அக் 25, 2025 20:18

ஆமாம் 240 சீட் தனியாக வைத்திருக்கும் கட்சி மைனாரிட்டி.... 99 சீட் வெற்றி பெற்ற கான் கிராஸ் கட்சி மெஜாரிட்டி.... விடியலை போல இவரும் கணக்குல புலி போல் தெரிகிறது.


Field Marshal
அக் 25, 2025 07:29

மதுவிலக்கு கொள்கையில் ஸ்திரமாக இருப்பது நிதிஷ் குமாரின் பலம் ..கிராமங்கள் எல்லாவற்றிலும் மின்சாரம் மற்றும் தரமான சாலை அமைப்பதில் கவனம் செலுத்தினார்


Abdul Rahim
அக் 25, 2025 13:32

உங்க 3 சதவீத நூலிபான் மெஜாரிட்டி யால மெஜாரிட்டி வாங்க துப்பில்லாம போச்சு கேசுவான் அதனால ஓவரா பில்டப்பு காட்டாம பீகார் தோழ்விக்கு நூலிபான்கள் இப்பவே கரணம் தேடுங்க கேசுவான்.....


பேசும் தமிழன்
அக் 25, 2025 20:21

ஆமாம்... புள்ளி வைத்த இந்தி கூட்டணி புட்டுக்கும்.... அதற்கு இப்பவே ஏதாவது காரணம் சொல்லி வையுங்கள்.... இருக்கவே இருக்கு ஓட்டு மெசின்..... தோல்விக்கான காரணம் சொல்ல.


pakalavan
அக் 25, 2025 07:24

இந்தியாவில் அதிக வாரிசு அரசியல் உள்ள கட்சினா அது யார்,


vivek
அக் 25, 2025 08:06

...நம்ம திராவிட கட்சிதான்


Apposthalan samlin
அக் 25, 2025 11:28

பிஜேபி


Indian
அக் 25, 2025 07:14

அப்ப தோல்வி உறுதி தான்.


vivek
அக் 25, 2025 08:05

இங்கு திமுகவிற்கு தோல்வி உறுதி தான் கைனாசம்


R K Raman
அக் 25, 2025 07:06

திமிர் பிடித்தவர்கள் தே ஜ கூ வில் உள்ளனரா? இது என்ன நியாயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை