உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவறான விளம்பரங்கள் கூடாது: பயிற்சி மையங்களுக்கு எச்சரிக்கை

தவறான விளம்பரங்கள் கூடாது: பயிற்சி மையங்களுக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட், பொறியியல் சேர்க்கைக்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு மற்றும் அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு தனியார் பயிற்சி மையங்களை நாடுகின்றனர். இந்த மையங்கள் தவறான, மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை வெளியிடுவதாகவும், நியாயமற்ற தொழில் நடைமுறைகளில் ஈடுபடுவதாகவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார்கள் சென்றன. இதுவரை, 24 பயிற்சி மையங்களுக்கு மொத்தம் 77.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. 49 பயிற்சி மையங்களுக்கு விளக்க நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.இது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தனியார் பயிற்சி மையங்கள் 100 சதவீதம் தேர்ச்சி அல்லது வேலை உறுதி போன்ற தவறான வாக்குறுதிகளை அளிக்கும் விளம்பரங்களை வெளியிடுவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறுவதாக உள்ளன. பயிற்சி மையங்கள் தங்கள் விளம்பரங்களில் துல்லியமான மற்றும் தெளிவான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும்.விளம்பரங்களில் பொறுப்புத் துறப்பு தொடர்பான தகவல்களையும் பெரிய எழுத்துகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை மீறும் பயிற்சி மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஏப் 18, 2025 13:20

விளம்பரங்களை மட்டுமே நம்பி மாணவர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து ஏமாறக்கூடாது. சேருவதற்கு முன்பு, அப்படிப்பட்ட மையங்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நேர்மையான பயிற்சி மையங்களில் மட்டுமே சேரவேண்டும்.


ஆரூர் ரங்
ஏப் 18, 2025 12:28

சிவப்பழகு கிரீமை ஆப்பிரிக்காவில் விற்க முயலாமல் இந்தியாவில் விற்றவர்கள் இதற்கும் வழிகாட்டி. ஏமாளிகள் இருக்கும் வரை..


Barakat Ali
ஏப் 18, 2025 11:05

நீட் கூடாது என்பதற்கு, சம்பந்தமே இல்லாமல் நீட் பயிற்சி மையங்களின் இந்த வரம்பு மீறலைக் கைகாட்டுகிறார்கள் திமுகவின் கொத்தடிமைகள்... நீட் ஒழிப்பு ரகசியம் என்று உளறி அதைக் காமெடி ஆக்கிய அவர்களது அரண்மனை இளவல் கூட இப்படிப் பிதற்றவில்லை ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 18, 2025 10:58

இதேபோல மிகைப் படுத்தப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றா விட்டாலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் முதல் எம்பி வரை இதற்குள் கொண்டு வர வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றும் விதத்தையும் அதற்கான பணத்தை எப்படி திரட்டி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதனையும் தேர்தல் வாக்குறுதிகளிலேயே குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தேர்தலில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் உறுதி மொழி பத்திரம் Memorandum of Understanding. என்ற வகையில் ஒவ்வொரு வாக்காளரும் பதிவு செய்ய வேண்டும் அதற்கு குறைந்தது பத்து வருடங்கள் அனுபவமுள்ள ஆடிட்டர் மற்றும் வக்கீல் இருவர் சாட்சி கையெழுத்து இட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு போட வேண்டும்.


Sampath Kumar
ஏப் 18, 2025 10:30

பயிற்சி மையகரனுக நல்ல துட்டு சம்பாதிக்கத்தானே நீட் போன்ற இன்ன பிற தேர்வுகள் உருவாக்கினார்கள் அப்புறம் எப்படி விளம்பரம் செய்வான் அம்புட்டும் பொய் தான்


baala
ஏப் 18, 2025 09:38

உண்மையை ஆராயாமல் பார்க்காமல் கருத்து எழுதும் அன்பர்கள் நிறைய இந்த தளத்தில்


Kasimani Baskaran
ஏப் 18, 2025 08:15

தீம்காவுக்கு ஓட்டுப்போட்டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள் - ஆனால் ஓடுவது சாராய ஆறு...


raja
ஏப் 18, 2025 06:04

பாருங்க யுவர் ஹோனர் இங்கே ஒருத்தன் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விட்டு மாடல் ஆட்சின்னு சொல்லிகிட்டு கருத்து சுகந்திறத்தை நசுக்கி மக்களை அடிமைகளை போல நடத்துறான்...


raja
ஏப் 18, 2025 06:04

பாருங்க யுவர் ஹோனர் இங்கே ஒருத்தன் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விட்டு மாடல் ஆட்சின்னு சொல்லிகிட்டு கருத்து சுகந்திறத்தை நசுக்கி மக்களை அடிமைகளை போல நடத்துறான்...


சமீபத்திய செய்தி