உதவி கிடைக்கவில்லை!
வயநாட்டில் பேரிடர் ஏற்பட்டு, 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதியாக இதுவரை எதுவுமே வரவில்லை. மத்திய அரசு உதவி செய்வதாக உறுதி அளித்திருந்தும், அதை நிறைவேற்ற மறுக்கிறது. பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மக்களிடம் முறையிடுவோம்!
எங்கள் கட்சியிலிருந்து எதிரணிக்கு தாவிய எம்.எல்.ஏ.,க்களை பதவிநீக்கம் செய்யும்படி நீதிமன்றத்தில் முறையிட்டோம். ஆனால், இன்னும் நீதி கிடைக்கவில்லை. எனவே, மக்களை நேரடியாக சந்தித்து, இது குறித்து மக்கள் மன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம். உத்தவ் தாக்கரே, தலைவர், சிவசேனா உத்தவ்பிரிவு ஏன் இந்த நாடகம்?
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா, ஹரியானாவில் உள்ள விவசாயிகளின் நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்தார். அந்த காங்கிரஸ் கட்சியினர் தான், தற்போது விவசாயிகளின் காவலர்கள் போல் பேசுகின்றனர். ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,