உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  எந்த சட்டமும் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது: எம்.பி.,க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

 எந்த சட்டமும் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது: எம்.பி.,க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

புதுடில்லி: “எந்தவொரு சட்டமும், குடிமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது; விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் எப்போதும் அவர்களின் வசதிக்காக இருக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில், நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உட்பட தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்தியில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றது முதல், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கியே அரசின் பயணம் உள்ளது. நாடு இப்போது, 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், பொருளாதாரம் அல்லது வருவாயை மையமாக கொண்டது அல்ல; முற்றிலும் குடிமக்களை மையமாக கொண்டுள்ளன. மக்களின் முழு திறனும் வளர்வதற்கு, அவர்களின் அன்றாட தடைகளை நீக்குவதே இதன் குறிக்கோள். எந்தவொரு சட்டமும், குடிமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது; விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் எப்போதும் அவர்களின் வசதிக்காக இருக்க வேண்டும். அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்த எக்ஸ்பிரஸ், மக்களின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து அவர்களின் தினசரி கஷ்டங்களை நீக்க வேண்டும். இதற்கு, எம்.பி.,க்களின் பங்கு மிகவும் அவசியம். விதிமுறைகள், ஆவணங்கள் என்ற பெயரில், 30 - 40 பக்க படிவங்கள் மற்றும் தேவையற்ற காகித வேலைகளின் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரும்புகிறது. மீண்டும் மீண்டும் சுய விபரம் குறித்து தரவு சமர்ப்பிக்கும் முறையை அகற்ற வேண்டும். இது பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை. மக்களின் வீட்டு வாசலில் அரசின் சேவைகளை வழங்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venugopal S
டிச 10, 2025 11:28

எல்லா சட்டங்களும் அவர்களுக்கு சாதகபாகவே இருக்க வேண்டும் என்கிறார்.


vivek
டிச 10, 2025 12:52

எப்படியோ ...திமுக சொம்புகளுக்கு பாதகமாக இருந்தால் சரி...


சிந்தனை
டிச 10, 2025 10:34

மிக அருமையான சிந்தனை மிக அருமையான கருத்து வெளிப்படையாக தைரியமாக பேசிய பிரதமருக்கு நன்றிகள் இதனுடன் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்...


Krishna
டிச 10, 2025 06:50

Stop Lecturing & Start Acting Positively-Constructively Without Dictatorships


vivek
டிச 10, 2025 07:50

stop blabbering against government and behave like a proper citizen


Kasimani Baskaran
டிச 10, 2025 03:59

திராவிடச்சட்டம் தமிழகத்துக்கு கடும் சுமை. ஒரு பக்கம் திருமுருகாற்றுப்படை சொல்வதால் மசூதியில் ஆடு வெட்டினோம், தோல் உரித்தோம், போகர் கூட சிக்கந்தர் பற்றி எழுதி இருக்கிறார், நெல்லித்தோட்டம் கோவிலுக்கு சொந்தமானது அல்ல - போன்ற பல சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் சட்டங்களை தயாரித்து மிரட்டி வருகிறார்கள். எந்த உயிர்களையும் கொல்லாத சமணர்களை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு ஆடு வெட்டினோம் என்பது சந்தேகத்தை வரவழைப்பது. சிவன் கோவிலை மேலே வைத்துக்கொண்டு அவர் அசைவம் என்று இந்தக்காலத்தில் சொல்வது தவறானது. இன்றைய காலக்கட்டத்தில் மாமிசம் முருகனுக்கு எங்கும் படைக்கப்படுவது கிடையாது. விளக்கேற்றுவதால் இஸ்லாத்துக்கு பங்கம் வந்துவிடப்போவது இல்லை - அதுவும் தர்க்காவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் விளக்கேற்றுவதில் சிக்கந்தர் கோவித்துக்கொள்ளுவார் என்று சொல்வது சுத்த பயித்தியக்காரத்தனம். இன்றும் கூட 150 க்கு மேற்பட்ட கோவில்கள் எந்த மேல்முறையீட்டுக்கும் இடம் கொடுக்காமல் சட்டத்துக்கு புறம்பாக இடக்கப்படுகின்றன. பல பழங்கால கோவில்கள் மசூதிகளாக்கப்பட்டு இருக்கின்றன - இந்துக்கள் அதையெல்லாம் கேட்கவில்லை. மலைமேல் ஆண்டுக்கு ஒருமுறை கூட விளக்கேற்றி விடக்கூடாது. திராவிடச்சட்டம் நெஞ்சுக்கு நீதி போல மகா கொடூரமானது..


karan
டிச 10, 2025 02:39

Mr 4th Economy you have a right to talk anything, as we are all fool to accept no good road, no good water, no good air. Good job


vivek
டிச 10, 2025 06:40

keep your eyes open and compare...


vivek
டிச 10, 2025 07:52

no good road. no water, no good air?? then better run to Pakistan...we Indians are happy


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை