உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி சீனா இல்லை... இந்தியா தான்! உலகம் முழுதும் குவியும் பாராட்டு

இனி சீனா இல்லை... இந்தியா தான்! உலகம் முழுதும் குவியும் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏடன் வளைகுடா பகுதியில், ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்த எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக, நம் நாட்டுக்கு உலக முழுதுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023 அக்., 7ல் மோதல் துவங்கியதில் இருந்து, ஏடன் வளைகுடா, அரபிக்கடல், செங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி படையினர் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மீட்பு பணி

சமீபத்தில், ஏடன் வளைகுடா பகுதியில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின், 'மார்லின் லுவாண்டா' என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்ததில், கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இதில், 22 இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர்.இவர்கள் உதவி கோரியதை அடுத்து, நம் கடற்படையினர், ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க்கப்பல் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்த கப்பலில் இருந்த தீயை அணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில், நம் கடற்படையின் இந்த செயலுக்காக, நம் நாட்டுக்கு உலக முழுதுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் அர்பன் கூறுகையில், ''ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில், சீனாவை விட, இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது,'' என்றார்.

கூர்ந்து கவனிப்பு

சமூக வலைதளத்தில், வரலாற்று ஆசிரியர் மார்ட்டின் சாயர்ப்ரே வெளியிட்ட பதிவில், 'இந்தியா தலைமை தாங்குகிறது; அதன் சக்தி எழுச்சி பெறுகிறது. இனி, சீனாவை கொண்டாடுவதை நிறுத்துங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.பத்திரிகையாளர் அபிஜித் அய்யர் மித்ரா வெளியிட்ட பதிவில், 'அரபிக் கடலில் கப்பல் போக்குவரத்துக்கு இந்தியா பாதுகாப்பு அளித்து வருகிறது. ஜிபூட்டியில் தளத்தை வைத்திருக்கும் சீனா அல்ல' என, தெரிவித்துள்ளார்.'மார்லின் லுவாண்டா' எண்ணெய் கப்பலுக்கு அளிக்கப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ''அவசர அழைப்பின்படி சம்பவ இடத்துக்குச் சென்ற ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க்கப்பல், ஆறு மணி நேரம் போராடி, கப்பலில் இருந்த தீயை அணைத்தது. ''இந்த கப்பலுக்கு உதவ, அமெரிக்கா மற்றும் பிரான்சும் முன்வந்தன. தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Hari
பிப் 05, 2024 09:46

இந்தியாவை புகழ்ந்த அந்த மனிதர் இந்தியாவையம் சீனாவையம் ஒப்பிட்ட்து சரியா ?


Dv Nanru
பிப் 03, 2024 09:08

இந்தியாவின் பெருமையும் திறமையும் போக போக சீனா தெரிந்து கொள்ளும் ...நம்முடைய எதிரி நாடுகள் நம்முடைய காலை பிடித்து கெஞ்சும் நேரம் வந்தது விட்டது ...


M Ramachandran
பிப் 01, 2024 20:03

நம் கடற்படையினய்ய்ய போற்றாமல் தூற்றும் தேச விரோதிகள் பாகிஸ்தான் அல்லது சீனாவிற்கு சென்று விடலாம். நமக்கு நல்லது


N Annamalai
பிப் 01, 2024 08:38

பாராட்டுகள் .சமயத்தில் உதவி பெரிய விஷயம்


A1Suresh
ஜன 31, 2024 17:08

தொடர்ந்து பயிற்சியிலும், களப்பணியிலும் இருப்பவனே நல்ல வீரன் . மேரா பாரத் மஹான் . பாரத் மாதா கீ ஜெ . ஜெய் ஸ்ரீராம் .விஜயீ பவ மோடிஜி


SK.VAIDYANATHAN
ஜன 29, 2024 20:01

All these news readers in tamil seems don't know how to read our classical language tamil. Reading like "சுக்குமி லகுதி". Not only in your site..generally in all sites ..otherwise it's easy to hear(with correct pronunciations) than reading ..


கனோஜ் ஆங்ரே
ஜன 29, 2024 19:07

என்னம்மா கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க..?


RAMESH
ஜன 29, 2024 20:10

வயிறு கப கபனு எறியர்து . தண்ணிய குடி . இனிமேல் இந்த மாதிரி செய்திகள் தான் உலகம் முழுவதும் வரும்


PC Vasanth Singh
ஜன 29, 2024 12:44

Really a great action taken by the Indian Navy to help the distressed Merchant oil tanker vessel. We all Indians are proud of our Indian Navy.b


Nava
ஜன 29, 2024 11:45

இந்திய கடற்படையை யாரும் உதாசீனப் படுத்தி விட முடியாது என்பதுதான் உண்மை நிலவரம்.ஜெய் ஹிந்த்


Duruvesan
ஜன 29, 2024 11:44

இங்கிலாந்து பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை