உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக் திட்டவட்டம்

இனி பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஷ்வர்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாவிட்டாலும் அனைத்து விவகாரங்களிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவளித்துவந்த பிஜூ ஜனதா தளம், இனி பிரச்னை அடிப்படையில் கூட பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்காது என அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அக்கட்சிக்கு ராஜ்யசபாவில் 9 எம்.பி.,க்கள் உள்ளனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கட்சியை கடுமையாக விமர்சித்த பா.ஜ., லோக்சபாவில் மொத்தமுள்ள 21ல் 20 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. அத்துடன் 147 தொகுதிகள் அடங்கிய சட்டசபை தேர்தலில் 78 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. 25 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்துவந்த பிஜூ ஜனதா தளம், லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. சட்டசபை தேர்தலில், வெறும் 51 இடங்களையே கைப்பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாவிட்டாலும் அனைத்து விவகாரங்களிலும் பா.ஜ.,வுக்கு, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆதரவு அளித்து வந்தது. ஆனால் தேர்தலில் பா.ஜ., தோற்கடித்ததால் பி.ஜ.த கட்சி கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஜூ ஜனதா தளம் எம்.பி.,க்களுடன் நவீன் பட்நாயக் ஆலோசனை நடத்தினார். அப்போது, இனி பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை என நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இது குறித்து எம்.பி.,க்கள் மத்தியில் நவீன் பட்நாயக் பேசுகையில், ''இனிமேல் பிரச்னை அடிப்படையில் கூட பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை. பிஜூ ஜனதா தளம் எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். ஒடிசா மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை உரிய முறையில் பார்லி.,யில் எழுப்புவோம். ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும் குரல் எழுப்புவோம்'' எனப் பேசியுள்ளார். பா.ஜ., அரசு கொண்டுவரும் சட்டங்களுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை ஆதரவு தேவைப்படும்போது, இக்கட்சியின் 9 எம்.பி.,க்கள் ஆதரவு அளித்துவந்த நிலையில், தற்போது இந்த முடிவால் மத்திய பா.ஜ., அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

SavithriRavikumar Ravikumar
ஜூன் 25, 2024 14:18

Better to be a tiger than a cat


venugopal s
ஜூன் 24, 2024 22:31

பாஜக ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்ற உண்மையை இப்போதாவது உணர்ந்து கொண்டாரே, அதுவரை மகிழ்ச்சி தான்!


Vijay D Ratnam
ஜூன் 24, 2024 22:29

நவின் பட்நாயக் அவர்களே, உங்கள் நேர்மையையோ அல்லது V.K. பாண்டியன் நேர்மையையோ இங்கே யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. அரசியலில் அப்பப்ப சில நல்ல மனிதர்களும் நல்ல தலைவர்களும் தோல்வியடைவார்கள். காமராஜரை தோற்கடித்து கருணாநிதி கைல நாங்க ஆட்சியை தூக்கி கொடுக்கவில்லையா. மொரார்ஜி தேசாய்டமிருந்து ஆட்சியை பிடுங்கி எமர்ஜென்சி பேயாட்டம் ஆடிய ஆயாவிடம் கொடுக்கவில்லையா. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரிசா மாநிலத்தின் மொத்தமுள்ள 21ல் 20 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. சட்டமன்றத்தில் 147ல் 78 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஒங்க தயவு அவுங்களுக்கு இப்போதைக்கு தேவை இல்லை. அதுக்காக கட்சியை கான்.க்ராஸ் கும்பல்ல போயி கலந்து உட்டுடாதீங்க. வாய்க்கால்ல சாக்கடையை கலந்தாலும் - சாக்கடையில் வாய்க்காலை கலந்தாலும் பொறவு அது கருணாநிதிகளையும், லல்லு பிரசாத் யாதவ்களையும், முலாயம் சிங் யாதவ்களையும், சிபு சோரன்களையும், அர்விந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பினாராயி விஜயனையும் பதவியில் உட்காரவைத்து தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் மக்கள் மக்கள் உள்ள நாடு இது.


c.chandrashekar
ஜூன் 25, 2024 11:34

நீங்கள் சொல்வது தமிழ் நாட்டிற்கு ஓகே ஆனால் திரு நவீன் பட்நாயக் நிகராக இன்று இந்தியாவில் எந்த பெரும் தலைவர் இல்லை அப்படி பட்டவர் மீது சில பொய் புரளிகளை எழுப்பி பி ஜே பி ஒடிசாவில் வென்று விட்டது


SENNAKRISHNAN
ஜூன் 26, 2024 19:23

சார் உண்மையான பதிவு


Azar Mufeen
ஜூன் 24, 2024 22:18

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, அதுனாலதான் அண்ணாமலையை கழட்டிவிட்டுட்டார் பழனிசாமி


SavithriRavikumar Ravikumar
ஜூன் 25, 2024 14:20

எடப்பாடி எங்கே?


தமிழ்வேள்
ஜூன் 24, 2024 20:10

வி.கே. பாண்டியன் திருவிளையாடல்... இனிமேல் திராவிட ஸ்டாக் எவனையாவது அண்ட விடுவீங்க? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..


தாமரை மலர்கிறது
ஜூன் 24, 2024 19:08

நவீன் பட்நாயக் ஆதரவு கொடுத்து தான் பிஜேபி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. நவீன் தான் ஆதரவு கிடையாது என்றுள்ளார். அவரது எம்பிக்கள் இன்னும் ரெண்டு மாதத்தில் பிஜேபியில் இணைந்துவிடுவார்கள். அப்போது யாருமில்லாத கடையில் நவீன் டீ ஆற்றவேண்டியதில்லை.


ஆரூர் ரங்
ஜூன் 24, 2024 19:07

அப்போ எம்பி களுக்கு சம்பள உயர்வு தீர்மானம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பேன் என்கிறீர்களா? மீதியிருக்கும் ராஜ்ய சபை எம்பி களும் ஓடி விடுவர்.


Natchimuthu Chithiraisamy
ஜூன் 24, 2024 18:58

எடப்பாடி பழனிசாமி கௌண்டர் புரிந்து கொள்ள வேண்டும்


Indian
ஜூன் 24, 2024 18:43

கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம் பி ஜ த , பிஜு ஜனதா தளம் முடிந்தது


Ravichandran S
ஜூன் 24, 2024 18:40

அப்ப காங்கிரஸ் கூட கூட்டணி வையுங்க கட்சியே இல்லாம செய்துடுவாங்க


மேலும் செய்திகள்