உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலை யாரும் மதிப்பது இல்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி

ராகுலை யாரும் மதிப்பது இல்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி

புதுடில்லி: '' தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளையே பரப்பி வருவதால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சொல்வதை யாரும் பொருட்டாக மதிப்பது இல்லை,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் போட மாட்டோம். நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bpo0pdll&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை விமர்சித்து ராகுல் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ' மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். எனது வார்த்தையை குறித்து வைத்து கொள்ளுங்கள். டிரம்ப் விதித்த காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார்,' எனத் தெரிவித்து இருந்தார்.இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது: எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது. நாட்டின் நலனை மனதில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உலகம் முழுவதும் எங்களின் பணிகளில் நாட்டின் நலனுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இன்று இந்தியா வலிமையான நிலைப்பாட்டுடன் பேசி வருகிறது. நாங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். உலகில் யாருடனும் போட்டிபோடும் நிலையில் இருக்கிறோம். தற்போது இருப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா அல்ல. அப்போது நாட்டு நலனுக்கு அல்லாமல் பேச்சுவார்த்தைக்காக கெஞ்சினர்.ராகுலும், அவரது சகாக்களும், அவரது கட்சியும் எதிர்மறை விஷயத்தையே பரப்பி வருகின்றனர். இதனால், ராகுலை யாரும் ஒரு பெரிதாக எடுப்பது இல்லை. அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர். காங்கிரசை மக்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். இன்று வரை நாட்டின் வளர்ச்சிக்காக, அவர்களால் நேர்மறையான திட்டங்களுடன் வர முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

venugopal s
ஜூலை 06, 2025 13:30

இவருக்கு எதற்கு இந்த வேண்டாத கவலை? காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை அது, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!


ராமகிருஷ்ணன்
ஜூலை 05, 2025 21:37

எல்லாம் தெரிந்தும், பொறாமையால் பச்சை பொய் சொல்லி புளுகுவதால் யாரும் மதிப்பதில்லை. தமிழக அளவில் 550 டூபாகூர் புளுகுகளை புளுக வேண்டியிருக்கிறது. இந்திய அளவில் 5000 புளுகுகளை புளுகு வேண்டியிருக்கிறது. பாவம் அவருக்கு சிரமம் தான்


Ramesh Sargam
ஜூலை 05, 2025 21:22

ராகுலுக்கு திருமணம் ஆகியிருந்தால் அவர் மனைவியே ராகுலை மதித்திருப்பாரோ இல்லையோ தெரியவில்லை.


Rathna
ஜூலை 05, 2025 20:41

இந்த உலகத்தில் அர்த்தத்தோடு பேசுபவர்களையே யாரும் மதிப்பதில்லை. எப்போதும் காமெடி செய்தால்?


பேசும் தமிழன்
ஜூலை 05, 2025 19:43

எப்போதும் தான் இருக்கும் நாட்டை பற்றி தவறாக பேசும் பப்பு அவர்களை.... மனிதனாகவே மதிக்க முடியாது...... எப்போதும் தாய்நாட்டை பற்றி தவறாக பேசுவதையே தொழிலாக வை‌த்து‌க் கொண்டு இருக்கிறார்.... சரி சரி அவரது தாய்நாடு இத்தாலி தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.


Senthoora
ஜூலை 05, 2025 16:48

இப்போ இந்தியாவை, ஏர் இந்தியாவை யாரும் மதிப்பதில்லை.


M. PALANIAPPAN, KERALA
ஜூலை 05, 2025 16:42

குண்டு சட்டியில் குதிரை ஓட்டத்தான் ராகுலுக்கு தெரியும், ஆக்கபூர்வமாக ஏதாவது செய்து இருக்கிறாரா? காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு ஒரு மதிப்பும் இல்லாமல் இருந்தது, அனால் தற்போது நிலைமை அப்படி இல்லை, உலகம் முழுவதும் சுற்று பயணம் செய்து இந்தியாவின் பெருமையை மோடிஜி நிலை நாட்டியுள்ளார் . இந்தியாவுடன் கை கோர்க்க பெரும்பாலான உலக நாடுகள் தயாராக உள்ளது. எல்லா துறைகளிலும் இந்தியா முன்னேறிவருகிறது, இன்னும் ஒரு 10 வருடம் மோடிஜியின் ஆட்சி தொடர்ந்தால், இந்தியா நம்பர் ONE நாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை, வாழ்க மோடிஜி


தஞ்சை மன்னர்
ஜூலை 05, 2025 17:17

M. PALANIAPPAN, கேரளா குண்டு சட்டியில் குதிரை ஓடுவது யாரு என்று மக்களுக்கு தெரியும் பகோடா கூட்டம் யாரு என்றும் தெரியும்


Chandru
ஜூலை 05, 2025 16:34

It is high time that this brat is arrested under National Security Act


அப்பாவி
ஜூலை 05, 2025 16:30

எந்தக் கெடுவை ஏற்றுக் கொண்டாலும் நாட்டு நலனுக்காகவே செஞ்சோம்னு ஒரு பிட்டப் போட்டுடுவோம்.


அப்பாவி
ஜூலை 05, 2025 16:28

ஆணவம் தலைக்கு ஏறிக்கெடக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை