உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிடிவாதத்தின் மறுபெயர் மம்தா; பதில் சொல்லியே தீரணும் என பிரதமர் மோடிக்கு கடிதம்!

பிடிவாதத்தின் மறுபெயர் மம்தா; பதில் சொல்லியே தீரணும் என பிரதமர் மோடிக்கு கடிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுக்க சட்டம் இயற்ற வேண்டும். இது போன்ற உணர்ச்சிகரமான பிரச்னைக்கு உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை' என மீண்டும் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.கோல்கட்டாவில் மருத்துவ கல்லூரியில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில், பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுக்க சட்டம் இயற்ற வேண்டும். இது போன்ற உணர்ச்சிகரமான பிரச்னைக்கு உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.இருப்பினும் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து பதில் வந்துள்ளது.

மனசாட்சி

சமீபத்தில் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள தீவிரமான பிரச்னைகளை சரி செய்ய எந்த பதிலும் குறிப்பிடவில்லை. இந்தப் போக்கைப் பார்ப்பது பயமாக இருக்கிறது. இது சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும் மனசாட்சியையும் உலுக்குகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நமது கடமையாகும். கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான மத்திய சட்டத்தின் மூலம் இத்தகைய தீவிரமான பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.

முதல் கடிதம்!

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி புள்ளிவிவர அடிப்படையில் நாடு முழுதும் தினமும் 90 பலாத்கார வழக்குகள் பதியப்படுவது வேதனை அளிக்கிறது என பிரதமருக்கு மம்தா கடிதம் எழுதினார். இதற்கு மேற்குவங்கத்தில் 123 விரைவு கோர்ட்டுகள் அமைத்தும் செயல்படாமல் உள்ளதாக, மம்தாவுக்கு மத்திய அரசு பதில் கடிதம் அனுப்பி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

xyzabc
ஆக 30, 2024 22:54

புத்தி கெட்ட அரக்கி . இவள் செய்த தப்புகளுக்கு tmc காரர்கள் பதில் சொல்லணும்.


Anonymous
ஆக 30, 2024 22:27

என்ன, ஒரு உபீஸ்ய்யும் காணோம், பாவம்ப்பா, வந்து, உங்க indi கூட்டணி மமதா அக்காவுக்கு கொஞ்சம் குடுங்கப்பா, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அமைதி காக்குறீங்களே? எங்கப்பா போனீங்க velan Iyengar, ரொம்ப பிசியா? இல்ல, தூக்கமா?


Sathyanarayanan Sathyasekaren
ஆக 30, 2024 18:53

மேற்கு வங்காள மக்களை மிக சிறந்த அறிவாளிகள்.


lana
ஆக 30, 2024 18:34

எல்லாவற்றையும் மத்திய அரசு செய்தால் நீங்கள் எதற்கு. வெட்டி சம்பளமும் மக்கள் வரி பணத்தை வீணடிக்க வேண்டாம். ராஜினாமா செயுங்கள்


sridhar
ஆக 30, 2024 18:33

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுத்தா உன் கட்சியில் எந்த ஆணும் மீதி இருக்க மாட்டான் .


Kumar Kumzi
ஆக 30, 2024 17:35

நாட்டை நாசமாக்க நினைக்கும் ஒனக்கு நாட்டுக்காக உழைக்கும் மோடி அவர்களை பற்றி குறை சொல்ல என்ன தகுதி இருக்கு


Sankare Eswar
ஆக 30, 2024 15:38

இவ்வளவு நாளா ...


GMM
ஆக 30, 2024 14:53

மம்தா மாநில முதல்வர். தன் மாநிலத்தில் நடந்த டாக்டர் படுகொலை /தடயம் அழிப்பு/குற்றவாளி மறைப்பிற்கு பெறுப்பேற்று முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். அனைத்து மாநில முதல்வர் கருத்து கேட்க வேண்டும். பின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் கருத்து பெற்று, ஒருங்கிணைத்து பிரதமருக்கு பணிந்து சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றம் அரசியல் குற்றவாளிக்கு அதிக சலுகைகள் கொடுப்பது ஆபத்து.


P.M.E.Raj
ஆக 30, 2024 14:38

தகுதியே இல்லாத இவரைப்போன்ற நபர்களை முதல்வராக ஆக்கியதன் பலன் அந்த மாநில மக்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். திசை திருப்பும் செயலை மட்டுமே செய்துகொண்டுள்ளார். திமுகவின் அதே பாணியை கையில் எடுத்துள்ளார் மமதை பிடித்த மம்தா.


சுலைமான்
ஆக 30, 2024 14:32

அறுவெறுப்பு அரசியல் செய்வதில் பேகத்தை விஞ்ச உலகத்தில் ஆளில்லை.