உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கமொழி பேசுபவர்களை வங்கதேசத்தினர் என முத்திரை குத்த உரிமை இல்லை; மம்தா பானர்ஜி காட்டம்

வங்கமொழி பேசுபவர்களை வங்கதேசத்தினர் என முத்திரை குத்த உரிமை இல்லை; மம்தா பானர்ஜி காட்டம்

மால்டா: வங்க மொழி பேசும் எந்த நபரையும் வங்கதேசத்தை சேர்ந்தவர் என அறிவிக்க உரிமை இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.மேற்கு வங்கத்தில் மால்டா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது; எஸ்ஐஆர் பணிகள் ஏன் அவசரமாக தொடங்கப்பட்டது? பிப்ரவரியில் தேர்தல் வருவதை பாஜவினர் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே மிகவும் புத்திசாலித்தனமாக உள்துறை அமைச்சகம் இந்த பணிகளை திட்டமிட்டது. பாஜவால் மேற்கு வங்கத்தில் வெல்ல முடியாது. மால்டா மக்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் யாரும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டீர்கள். உங்கள் காவலனான நான் இங்கு இருக்கிறேன். ஆவணங்கள் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் டிச.12 முதல் அனைத்து தொகுதிகளிலும் முகாம்களை தொடங்குங்கள். மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு எந்த நிதியையும் தருவது இல்லை. கடிதங்கள் எழுதிய போது அதற்கு பதில் இல்லை. இங்கு எமர்ஜென்சி போன்ற ஒரு சூழலை உருவாக்க விரும்பினால் மக்கள், அதற்கு தக்க பதில் தருவார்கள். எஸ்ஐஆர் பணிகள் மூலம் நீங்களே உங்களுக்கு குழியை தோண்டிக் கொண்டு இருக்கிறீர்கள். பீஹாரில் நீங்கள் வென்றிருக்கலாம், ஆனால் மேற்கு வங்கத்தில் அது முடியாது. மக்களின் ஆதரவை உங்களால் பெற முடியாது. இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ