உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்தவொரு அரசியலுக்கும் இடமில்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து கிரண் ரிஜிஜு "பளீச்"

எந்தவொரு அரசியலுக்கும் இடமில்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து கிரண் ரிஜிஜு "பளீச்"

புதுடில்லி: 'நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நீதித்துறையில் உள்ள ஊழல் தொடர்பான விஷயம். இதனால், எந்த ஒரு அரசியலுக்கும் இடமில்லை' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் ஜூலை 2ம் தேதி நடக்க உள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரில், அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நீதித்துறையில் உள்ள ஊழல் தொடர்பான விஷயம். எந்த ஒரு அரசியலுக்கும் இடமில்லைநாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறோம், இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்து முடிவெடுக்க பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். எனவே, நான் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தை கேட்டு வருகிறேன், மேலும் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளேன். இது தொடர்பாக அனைவரையும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துவேன்.இந்த விஷயம் மிகவும் தீவிரமானது, இது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. எனவே, ஊழல் பற்றி நாம் விவாதிக்கும்போது, ​​அது நீதித்துறையில் ஊழலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எங்காவது நடந்த ஊழலாக இருந்தாலும் சரி, அது நாட்டின் முக்கியமானதாக கருத்தில் கொள்ள வேண்டும். அதில் நாங்கள் ஒரு தரப்பினர் கூறுவதை மட்டும் முக்கியமானதாக கருத்தில் கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தாமரை மலர்கிறது
ஜூன் 04, 2025 23:47

பிஜேபி மத்தியில் ஆளும்போது, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும், டேபிளுக்கு அடியில் கையை நீட்டினால், கை முறிக்கப்படும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக யஸ்வந்த் வர்மா. இது மற்ற நீதிபதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். நல்லபடியாக நடந்தால், ஓய்வுக்கு பின் கௌரவபதவிகள் மத்திய அரசு கொடுக்கும்.


c.mohanraj raj
ஜூன் 04, 2025 22:53

பணம் வாங்கும் போது இந்த அறிவு இருந்திருக்க வேண்டும் குற்றவாளி என்றால் எந்த ஒருவனும் குற்றவாளி தான் நீதிபதி என்ன பிரதமர் என ஜனாதிபதி என்ன கோயில் பூசாரி என்ன எல்லோரும் ஒன்றுதான்


Santhakumar Srinivasalu
ஜூன் 04, 2025 21:59

இவரை பதவி நீக்கம் செயது சொத்துக்களை பறிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் எதுவும் இல்லையா?


Varadarajan Nagarajan
ஜூன் 04, 2025 21:04

இதுபோன்ற ஊழல் நீதிபதிகளின் பதவிநீக்கம் தொடர்பாகமட்டும் தீர்மானம் இல்லாமல் அவர்கள்மீது சிபிஐ போன்ற அமைப்புகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தக்க தண்டனை பெற்றுதரும்வகையில் தேவையான சட்டதிருத்தமும் கொண்டுவரவேண்டும். நீதி அரசர்களும் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுபவர்கள். எனவே பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக கருதவேண்டும்.


Mohanarangan
ஜூன் 04, 2025 20:10

தேசத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் அறவழியில் நடந்தால் நாடு நலம் பெறும். எரிந்த பணம் நூறு கோடி எனில் தேசம் முழுவதும் எரியாதது எவ்வளவு இருக்குமோ. கொஞ்சம் கூட கூச்சம் இருக்காதோ உழைக்காமல் பணம் ஈட்டி அதனை செலவு செய்ய.


தமிழ்வேள்
ஜூன் 04, 2025 19:49

யஷ்வந்த் வர்மாவின் சக நீதியரசர்கள் உள்ளூர ஒவ்வொரு கணமும் பயந்து சாவது நீதித்துறையினருக்கு நன்கு தெரியும்... தான் மட்டுமே பணம் வாங்கவில்லை... யார் யாரெல்லாம் பணம் வாங்கி தீர்ப்பு சொன்னார்கள் என்ற விபரம் தன்னிடம் உள்ளதாக யஷ்வந்த் வர்மா ஒருமுறை பேச்சுவாக்கில் கசியவிட்ட தகவல் நீதிதுறையில் அதிகம் சுற்றலில் உள்ளதால், அன்னார் திருவாய் மலர்ந்தால் யாருக்கு என்ன ஆகுமோ? என்ற பதைபதைப்பு பதற்றம் இருப்பதற்கான அறிகுறிகள் நன்றாக தெரிகின்றன..


Karthik
ஜூன் 04, 2025 18:19

எப்போது தன் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அப்போதே தார்மீக பொறுப்பேற்று பதிவியை ராஜினாமா செய்திருப்பார் ஒரு நேர்மையான நீதிபதி. ஆனால் இங்கு குற்றம் சாட்டப்பட்டு - குற்றம் நிரூபிக்கப்படும் விட்டது. கூடிய விரைவில் பாராளுமன்றத்தை கூட்டி இவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது - இதையும் அந்த நீதிபதி நன்கு அறிந்திருப்பார்.


Amar Akbar Antony
ஜூன் 04, 2025 18:06

பதவி நீக்கம் மட்டுமா? சொத்துக்கள் எல்லாம் அரசுடைமையாக்க வேண்டாமா? கொலீஜியம் ஒழிய வேண்டும்.


D.Ambujavalli
ஜூன் 04, 2025 17:58

பாவம், அக்கினி பகவான் இந்த நீதிபதியின் சொரூபத்தை வெளிக்கொணர்ந்துவிட்டார் அதே அக்கினி ஒவ்வொரு ஊழல் பேர்வழிகள் வீட்டுக்கும் விஜயம் செய்து போலீஸ், லஞ்ச ஒழிப்புத்துறை வேலையையெல்லாம் பார்ப்பது சாத்தியமா? இதனால் பணத்தை வீட்டில் மூட்டை கட்டி வைத்திருப்பவர்கள் கவனமாக இருப்பார்கள் அவ்வளவுதான் மற்றபடி, ஊழலாவது, ஒழிவதாவது


ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 17:17

இன்றுவரை எரிந்த பணம் யாருடைய பணம். யார் கொடுத்தது. எதற்காக கொடுத்தது என்ற தகவல்களே வெளிவர வில்லை. FIR ஏதுமில்லை. தலைமை நீதிபதி என்ன பதில் வைத்திருக்கிறார்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை