உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓராண்டுக்கு சம்பளம் கிடையாது... ரூ.20 லட்சம் கொடுக்கணும்; வேலைக்கு ஆள் தேடும் சொமேட்டோ!

ஓராண்டுக்கு சம்பளம் கிடையாது... ரூ.20 லட்சம் கொடுக்கணும்; வேலைக்கு ஆள் தேடும் சொமேட்டோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: புது விதமான நிபந்தனைகளுடன் சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ளார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் முன்னணியில் இருக்கும் சொமேட்டோவில், ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தீபிந்தர் கோயல் செயல்பட்டு வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தலைவர் என்ற பதவியை உருவாக்கி, அந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். ஆனால், இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில கண்டிசன்களையும் போட்டுள்ளார். அதாவது, இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அதேபோல, அந்த நபர் ரூ.20 லட்சத்தை முன்தொகையாக, பீடிங் இண்டியா (FEEDING INDIA) அமைப்புக்கு கொடுக்க வேண்டும். அதன்பிறகு, 2வது ஆண்டில் இருந்து வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு அதிகமான தொகை சம்பளமாக வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படுபவர் சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீபிந்தர் கோயல் விடுத்துள்ள பதிவில், 'இது வழக்கமான சலுகைகளுடன் இருக்கும் வேலை கிடையாது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஊதியம் பெறும் நோக்கில் இருக்கக் கூடாது. கற்றல் வாய்ப்பிற்காக இந்தப் பணியைச் செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள், சொமேட்டோவின் உயர் திட்டங்களான பிளின்கிட், ஹைபர்ப்யூர் மற்றும் பீடிங் இண்டியா ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.சொமேட்டோ நிறுவனத்தின் இந்த புதுவிதமான வேலைவாய்ப்பு அறிவிப்பு, சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh N
நவ 21, 2024 16:09

ஆமாம் பெரிய பதவிக்கு சம்பளம் கிடையாது அதேபோல் ரோடு ரோடு டா டெலிவரி கொடுக்கிற ஆளுக்கும் சம்பளம் இல்லை சொன்ன நல்லா இருக்கும்


R S BALA
நவ 21, 2024 12:47

மொத நீ வேறு நிறுவனத்தில் இந்த நிபந்தனைகளோடு வேலை செய்வாயா கொயலு பணதிமிர்ல ஆடாத...


தஞ்சை மன்னர்
நவ 21, 2024 10:37

முதலில் இந்த நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுப்பது நிறுத்திவிட்டால் இவனுக தானாக அடங்கி விடுவானுக


Raj
நவ 21, 2024 10:09

பேசாமல் சொமேட்டோவை இழுத்து மூடி விடுங்கள். கோயல் நல்லா சம்பாதிச்சிட்டான், பணியாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி. யாரும் சொமேட்டோவை யூஸ் பண்ணவேண்டாம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 09:30

20 லட்சமும் கொடுத்து, இரவு பகலாக அடிமைப்பணி எடு. 12 மாசம் கழித்து மாசம் ரூ. 4 லட்சம் குடுக்கிறேன் என்கிறார். இதை நம்புகிற அறிவிலிகள் இருப்பார்களா?


Sudarsan Ragavendran
நவ 21, 2024 10:03

We will satisfy with Rs.200


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 21, 2024 14:00

12 மாதம் கழித்து வேலையை விட்டு நீக்கி விட்டால்.....


Barakat Ali
நவ 21, 2024 08:55

அப்பத்தான் கமிட்மெண்ட்டு இருக்கும் ........... காஷன் டெபாசிட் மாதிரி நினைச்சுக்கலாம் .... எல்லாம் பேப்பர் ல இருக்கோணும் .... இதுல தப்பில்ல .......


சமீபத்திய செய்தி