உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வி கற்க மாணவர் இல்லை; காற்றாடும் அரசு பள்ளிகள்; ம.பி.,யில் தான் இந்த நிலை!

கல்வி கற்க மாணவர் இல்லை; காற்றாடும் அரசு பள்ளிகள்; ம.பி.,யில் தான் இந்த நிலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 5 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை. மற்ற பள்ளிகளில் சொற்ப மாணவர்களே சேர்ந்துள்ளனர்.ம.பி.,யில் பள்ளிப்படிப்பை அதிகரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக ' அனைவரும் படிக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சி பெற வேண்டும் ' என்ற கோஷத்தை உருவாக்கி உள்ளதுடன், மதிய உணவு மற்றும் இலவச சீருடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.மாநிலத்தில் மொத்தம் 94,0399 அரசு பள்ளிகள் உள்ள நிலையில் 5.500 பள்ளிகளில் முதல் வகுப்பில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை. 25 ஆயிரம் பள்ளிகளில் ஓன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 11,345 பள்ளிகளில் 10 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இந்த 41,000 பள்ளிகளில் 40 சதவீதம் மாணவர் சேர்க்கை மட்டுமே நடந்துள்ளது.சியோனி, சாத்னா, நர்ஷிங்பூர், பெடல் கார்கோன், சாகர், விதிஷா தேவஸ் மற்றும் மண்டசூர் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.அரசு பள்ளிகளில் மோசமான உள்கட்டமைப்பு, போதிய ஆசிரியர்கள் இல்லாதது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 46 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. மற்ற 47 மாவட்டங்களில் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1.5 முதல் 2 லட்சம் வரை செலவு செய்யப்பட்டாலும், அது முறையாக செலவு செய்யப்பட்டு உள்ளதா என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால், பல பெற்றோர் அரசு பள்ளிகளை தவிர்த்துவிட்டு தனியார் பள்ளிகளை நாடுவதாக கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

அப்பாவி
செப் 26, 2024 18:47

தனியார் பள்ளிகளில் இங்கிலீஷ் சொல்லிக் குடுக்கறாங்க ஹை. இது தெரியாம சிலர் கத்துறாங்க ஹை.


narayanansagmailcom
செப் 26, 2024 18:41

காரணம் சரியான வகுப்பறைகள் உபகரணங்கள் ஆசிரியர் இப்படி எதுவம் இல்லை என்றால் யார் சேருவார்கள்.


Malarvizhi
செப் 26, 2024 14:18

வரலாறு திரும்புகிறது. ஏட்டுக் கல்வி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்றுதான் 1960-ற்கு முன்பு பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஏட்டு கல்வி கற்க பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. அதனால்தான் காமராசர் ஐயா மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார் தமிழ்நாட்டில்.


ஆரூர் ரங்
செப் 26, 2024 13:24

ஸ்டாலின் மேயராக இருந்த போது பல மாநகராட்சிப் பள்ளிகளில் சேர மாணவர்கள் வரவில்லை என்று கூறி மூடிவிட்டார் அல்லது பக்கத்திலிருந்த பள்ளிகளுடன் இணைத்தார். தமிழன்டா.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 26, 2024 12:59

தமிழகத்தில் இந்த இழிநிலை இல்லை ........ அதற்குக் காரணம் காமராஜர் ....... திராவிட கசுமாலங்கள் இல்லை .... இன்று தமிழகத்தின் கல்வித்தரம், வகுப்புகளின் நிலை, ஆசிரியர்களின் தரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இவற்றைச் சென்று பார்த்தால்தான் புரியும் .....


Apposthalan samlin
செப் 26, 2024 12:03

தமிழ் நாட்டில் 7.5% இட ஒதுக்கீடு காரணத்தாலும் திமுக அரசு எடுத்த முயற்சியாலும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் அதிகரித்து இருக்கிறது .நான் 12 வரை அரசு பள்ளியில் தான் படித்தேன் முமொழி கொள்கை கொண்டு வந்தால் படிக்கவே யாரும் வர மாட்டார்கள் .


Lokesh Babu
செப் 26, 2024 10:24

கிட்டத்தட்ட 30வருடங்கள் பிஜேபிஅங்கு ஆட்சி செய்கிறது வெட்க்க கேடு கல்வி தரத்தை உயர்த்தவும்


Dharmavaan
செப் 26, 2024 09:49

ம பி அரசு இதை ஏன் விசாரணை நடத்தவில்லை. தினமலர் மாணவர் பெற்றோரிடம் விசாரித்ததா .தமிழ் நாட்டை பற்றி ஏன் தினமலர் விசாரிக்கவில்லை. இந்த செய்தி திமுகவுக்கு மெல்ல அவல் கிடைத்தது போல


Dharmavaan
செப் 26, 2024 09:38

தமிழ் நாட்டில் என்ன நிலை என்று போட வேண்டும் ம பி க்கு போகும் முன்


Muralidharan raghavan
செப் 26, 2024 11:22

கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பு தமிழகத்திலும் பல இடங்களில் இதுபோன்ற நிலைமை இருந்தது. அதற்கு பின்பு பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தனர். அதற்கு காரணம் பொருளாதாரம். பலரும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.


KRISHNAN R
செப் 26, 2024 08:55

கல்வி சுகாதாரம் 111,, எல்லா இடங்களிலும்


புதிய வீடியோ