உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாடா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா நியமனம்

டாடா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா நியமனம்

புதுடில்லி: ரத்தன் டாடா மறைவையொட்டி, டாடா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம்( 9ம் தேதி) இரவு காலமானார். தற்போது, அவரது மறைவிற்குப் பிறகு, ரூ.30 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்,இன்று டாடா அறக்கட்டளை புதிய தலைவராக, நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நோயல் டாடா, ரத்தன் டாடாவின் சகோதரர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ynx63qhn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

யார் இந்த நோயல் டாடா?

* நோயல் டாடாவுக்கு வயது 67. இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் டாடா குழுமத்தில் பல்வேறு துறையில் பணியாற்றி உள்ளார். டாடா குழுமத்தின் பல நிறுவனங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார்.* டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும், டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் உள்ளார்.* 2010ம் முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாயை 500 மில்லியன் டாலரில் இருந்து 3 பில்லியன் டாலராக உயர்த்தினார். 11 ஆண்டுகளிலேயே மிகப்பெரிய லாபத்தை காட்டி அசத்தினார் நோயல் டாடா.* மறைந்த ரத்தன் டாடாவின் தந்தை நேவல் டாடா. அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ரத்தன் டாடா மற்றும் ஜிம்மி டாடா என 2 மகன்கள். முதல் மனைவியை 1940களில் விவாகரத்து செய்த நேவல் டாடா, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.அந்த இரண்டாம் மனைவியின் மகன் தான், தற்போது டாடா அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்றுள்ள நோயல் டாடா ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sivagiri
அக் 11, 2024 19:32

டாடாக்களின் சாயல் இல்லையே - ஆங்கிலோ இந்தியன் போல தெரியுது ? . . .


Lion Drsekar
அக் 11, 2024 16:15

சமூக விரோதிகளே ஊருக்கு ஒரு வீடு என்று வைத்துக்கொள்ளும்போது இவர்கள் மக்களை உண்மையிலேயே வாழவைக்கின்றனர், இதுநாள் வரை எங்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வர்த்தகம் செய்து வருகிறார்கள் , இவர்களது சேவை மக்களுக்கு தேவை, இவர்கள் குடும்பம் நீடூடி வாழ வேண்டுகிறோம் , வந்தே மாதரம்


சாண்டில்யன்
அக் 11, 2024 15:13

அறக்கட்டளைத் தலைவரான நோயல் டாடா மறைந்த ரத்தன் டாடாவின் HALF BROTHER ரத்தன் டாடா வின் கூடப் பிறந்த சகோதரர் ஜிம்மி டாடாவின் இப்போதைய நிலை பற்றி ஏனோ தெரிவிக்கவில்லை .


vadivelu
அக் 11, 2024 17:35

ஜிம்மி டாட்டா உடல் நலம் சரி இல்லாமல் இருக்கிறார். ஆனாலும் ரத்தன் டாட்டா மறைவிற்கு நேரில் ஞ்சலி செலுத்தினார்.


Almighty
அக் 11, 2024 19:14

தெரியவில்லை என்றால் முதலில் கூகுளின் உதவியை நாடலாம். பிறகு அனைத்து தொலைகாட்சிகளிலும் அவர் அஞ்சலி செலுத்தியது காண்பிக்கப்பட்டது.


சாண்டில்யன்
அக் 12, 2024 00:06

நன்றி திரு வடிவேலு. பணம் சேரும்போது அவர்களின் முதல் சேமிப்பு நோய்கள்தானே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை