உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆகஸ்டில் இயல்பு மழை; செப்டம்பரில் கூடுதல் மழை; வானிலை மையம் தகவல்

ஆகஸ்டில் இயல்பு மழை; செப்டம்பரில் கூடுதல் மழை; வானிலை மையம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆகஸ்ட் மாதம் இயல்பு மழையும், செப்டம்பரில் இயல்பை காட்டிலும் கூடுதல் மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழையின் முதல் பாதியில் நாடு இயல்பை விட அதிகமான மழையைப் பெற்றது. ஹிமாச்சலப் பிரதேசம், திடீர் வெள்ளத்தை சந்தித்தது. பருவமழையின் 2வது பாதியிலும் (ஆகஸ்ட்,செப்டம்பர்) இயல்பைக்காட்டிலும் அதிகமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:பருவமழையின் இரண்டாம் பகுதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர் 2024) இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பதிவாகலாம். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும்.பருவமழையின் இரண்டாம் பாதியில் நாடு முழுவதும் இயல்பான மழைப்பொழிவை விட (நீண்ட கால சராசரியான 422.8 மி.மீ. இல் 106 சதவீதம்) அதிகமாக இருக்கும்.இவ்வாறு மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ديفيد رافائيل
ஜூலை 31, 2025 21:44

எனக்கு தெரிந்து இந்த வருடம் நல்ல மழைப்பொழிவு இருக்கு. சேமிக்க துப்பில்லாமல் வீணாக கடலில் கலக்க விடுறானுங்க.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 21:05

விவசாயிகளுக்கும், மக்களுக்கும் போதிய மழை பெய்தால் போதும். அதிகம் மழை பெய்தால் வெள்ளம் வந்து அனாவசியமாக கடலில் கலக்கும். மழையே இல்லாவிட்டால் பயிர் வாடும், மக்கள் குடிக்க கூட தண்ணீர் இன்றி வாடுவார்கள். இயல்பு மழை ஓகே.


Manaimaran
ஜூலை 31, 2025 20:29

பெய்யாலே பிறந்து .... ?


புதிய வீடியோ