உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை: திருப்பதி பயணத்தை ஒத்திவைத்தார் ஜெகன்மோகன்

கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை: திருப்பதி பயணத்தை ஒத்திவைத்தார் ஜெகன்மோகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: '' எனது திருப்பதி பயணத்தை தடுக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்கிறார். இதனால், பயணத்தை ஒத்திவைத்துள்ளேன்,'' என ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி தலைவர் ஜெகன் மோகன் கூறியுள்ளார்.திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பெரிய புயலை கிளப்பி உள்ளது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவிலை தூய்மைபடுத்தும் பணி நடந்தது.இந்நிலையில், சந்திரபாபுவின் பாவத்தை போக்க திருப்பதியில் பரிகார பூஜை நடத்தப்போவதாகவும், இதற்காக திருப்பதி செல்ல போவதாகவும் ஜெகன்மோகன் அறிவித்து இருந்தார்.இதனையடுத்து, ஜெகன்மோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ., கட்சிகள், திருப்பதி வெங்கடாசலபதி மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் உள்ளது என்று உறுதிமொழி பத்திரம் தர வேண்டும் என வலியுறுத்தின.இந்நிலையில் நிருபர்களிடம் ஜெகன்மோகன் கூறியதாவது: மாநிலத்தில் பேய் ஆட்சி நடக்கிறது. திருமலை கோவிலுக்கு நான் வருவதை அரசு தடுக்க முயற்சி செய்கிறது. கோவிலுக்கு செல்வது தொடர்பாக ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. இதனால், தலைவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.ஒருபுறத்தில், நாங்கள் கோவிலுக்கு செல்வதை மாநில அரசு ஒருபுறம் தடுக்கிறது. மறுபுறம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பா.ஜ.,வினர் ஏராளமானோர் கோவிலுக்கு வருகின்றனர். பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது பா.ஜ., தலைமைக்கு தெரியுமா என தெரியவில்லை. அரசியல் நோக்கத்தில் இந்த விவகாரத்தை திசை திருப்பும் வகையில், லட்டு பிரசாத விவகாரத்தை சந்திரபாபு கொண்டு வந்துள்ளார். லட்டு பிரசாதம் குறித்து அவர் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். எனது திருமலை பயணத்தை ஒத்தி வைக்கிறேன்.எனது ஜாதி குறித்து கேள்வி எழுப்புகின்றனர். வீட்டில் பைபிள் வாசிக்கிறேன். அதேநேரத்தில் மற்ற மதங்களை நான் மதிக்கிறேன். நான் மனிதநேய சமுதாயத்தை சேர்ந்தவன். முதல்வர் பதவிக்கு இணையான பதவி வகிக்கும் ஒருவர், கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிறகு தலித்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Venkatesan Srinivasan
அக் 03, 2024 10:48

அரேபியாவிலிருந்து வந்தவர் அந்தேரி வாடிகனில் இருந்து வந்தவர் வந்தேரியா?


Pandi Muni
செப் 28, 2024 16:20

தலித்துகளை நாங்க பாத்துக்குவோம் நீ சிலுவைய கட்டி அழுவேன் இந்து கோயில்குள்ள என்ன புடுங்குற வேலை


Nandakumar Naidu.
செப் 28, 2024 00:59

பொய் சொல்லுகிறான், அந்நிய மதத்தினர் திருப்பதி கடவுள் பாலாஜியை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் "பிரமாண பத்திரத்தில்" கையெழுத்திட வேண்டும். அதற்கு இவனுக்கு சமதம் இல்லை. இதிலிருந்தே தெரிகிறது இவனது மத சார்பின்மை போலியானது மற்றும் ஹிந்து விரோதி என்று.


கிஜன்
செப் 27, 2024 21:56

ஒரு benefit of doubt உங்களுக்கு கொடுக்கலாம் என்று பார்த்தால் .... இப்படி உளறுகிறீர்களே .... தினம் தினம் .... லட்சக்கணக்கான மக்கள் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள் ..... நாயுடுக்கு ஒரு வரிசை... ரெட்டிக்கு ஒரு வரிசை .... தலித்துகளுக்கு ஒரு வரிசை என்றா பிரிக்கிறார்கள் ? உங்களுக்கு கிறித்துவ மத பற்று இருப்பது ஒரு பிரச்சினை இல்லை .... ஏழுமலையானை மனப்பூர்வமாக நம்புகிறேன் என்று எழுதி கொடுப்பதில் என்ன தயக்கம் .... விதிப்படிதானே கோவில் நிர்வாகம் செயல்பட முடியும் ...


HoneyBee
செப் 27, 2024 20:44

எப்போது பைபிள் படிக்கிறேன் என்று சொன்ன போது இவர் இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லை என்று ஆகிறது. கையெழுத்து இட்டு செல்வதில் என்ன தவறு


aaruthirumalai
செப் 27, 2024 20:43

இந்த நபரால் திருமலை நிர்வாகத்தில் மறைமுக தாக்கம் ஏற்பட்டுள்ளது.


Dharmavaan
செப் 27, 2024 19:58

இந்த அந்தேரி மத வெறியன் தன் பெயரை கிருஸ்துவ பெயராக மாற்றிக்கொள்ள வேண்டும் ஹிந்து அமைப்பினர் வழக்கு தொடர வேண்டும்


Venkatesan Srinivasan
அக் 03, 2024 11:18

இந்த பாரத நாட்டில் பல்வேறு சமய மத பிரிவுகள் உள்ளதாலும் மக்களின் பெயரில் குறிப்பிட்ட மத வித்தியாசம் அறிய முடியாதபடி சில மதத்தவர் குறிப்பாக கிருஸ்தவ பிரிவினர் மாற்று மத இந்து பெயர் அடையாளம் சூடிக்கொண்டு சிலபல - இட ஒதுக்கீடு சலுகைகள் - இந்து கோவில் பிரவேசம் - இந்துமத வழிபாட்டு விஷயங்களில் தேவையற்ற தலையீடு விமர்சனங்கள் செய்கின்றனர். எப்பொழுது ஜாதி குறியீடு கண்டிப்பாக இட ஒதுக்கீடுகளுக்கு அவசியமோ அதேபோல் மதக் குறியீடுகளும் அவசியமாகிறது. ஆகவே எல்லா மக்களும் கண்டிப்பாக ஜாதிமத குறியீடுகளை வெளிப்படையாக தங்கள் பெயருடன் பொருத்த இந்திய அரசாங்கம் வழிமுறைகள் வகுக்க வேண்டும். மதமாற்றம் மேற்கொள்வோர் அந்தந்த தருணங்களில் அரசிதழில் பதிந்து குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம். எல்லா தருணங்களிலும் குறிப்பாக மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்களில் வெளிப்படையான ஜாதி மத குறியீடுகள் கொண்ட பெயர் மட்டுமே உபயோகிக்க வலியுறுத்தப்பட வேண்டும்.


Ramesh Sargam
செப் 27, 2024 19:56

பாவத்தை போக்க சிலுவையில் ஏறுங்கள். ஆணி அடித்து கொள்ளுங்கள்.


Dharmavaan
செப் 27, 2024 19:55

இவர் ஏன் ரெஜிஸ்டரில் கையொப்பமிட்டு செல்ல மறுக்கிறார். கிருஸ்துவன் அது பற்றி மட்டுமே பேசுவதில்லை.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 27, 2024 19:54

பிறகு தலித்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன் இந்த ஒற்றை வரியில் இவர் சுயரூபம் தெரிகிறது. இவர் செய்த தவறை மறைக்க, தலித் மக்களை உள்ளே இழுத்து, ஜாதிப் பிரச்சனையை தூண்டி திசை திருப்புகிறார்.


புதிய வீடியோ