உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்

ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன்'', என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.கிஷன்கஞ்ச்சில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: ஹரியானாவில் நடந்த 25 லட்சம் ஓட்டுத்திருட்டு குறித்த தகவல்களை வெளியிட்டேன். ஆனால், மீடியாக்கள் அதனை காட்டவில்லை. இதனை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும் . ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன். அவர்களின் முழுமுயற்சி நடக்கிறது. மீண்டும் இது நடக்காமல் இருப்பதற்கு ஓட்டுச்சாவடிகளில் விழிப்புடன் இருப்பது உங்களின் கடமை என பீஹார் இளைஞர்கள், மாணவர்களின் கடமை. அம்பானி, அதானிக்காக மோடியும், நிதீஷ்குமாரும் பணியாற்றி வருகின்றனர். உங்களின் எதிர்காலத்தை திருட வேண்டும் என்பதற்காக, ஓட்டுக்களை திருட முயற்சி செய்கின்றனர்.ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு ஓட்டுச்சாவடிகளில் பிரேசில் மாடலின் புகைப்படம் 200 முறை இடம்பெற்றுள்ளது. உ.பி.,யில் இருந்து ஓட்டுப்போட பாஜ தொண்டர்கள் ஹரியானா வந்துள்ளனர். என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கின்றீர்கள். ஆனால், உண்மையான பிரச்னை ஓட்டுத் திருட்டு. இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

rama adhavan
நவ 09, 2025 23:39

குணசீலம், ஏர்வாடியில் கட்டாயம் மந்திரிக்க வேணும்.


சாமானியன்
நவ 09, 2025 22:22

ஐந்து வயது குழந்தை கூட சொல்லும் ராகுல் பேசுவது அபத்தம் என்று. அப்படி வாக்குத் திருட்டு ஏற்படக் கூடாது என்பதற்காகவே அடிக்கடி S.I.R நடக்கின்றது.


D Natarajan
நவ 09, 2025 22:08

சிங்க்வி, கபில் சிபல் தயாராய் இருப்பார்களே


Vasan
நவ 09, 2025 22:04

All voter ID to be linked with Aadhaar ID.


பாரத புதல்வன்
நவ 09, 2025 21:36

இத்தாலி மனநல காப்பகத்தில் சேர்த்து விடவும்.


Balasubramanian
நவ 09, 2025 21:31

நாங்களும் இந்த விவகாரத்தை விட்டு விடப் போவதில்லை! பீகாரில் தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு நீங்கள் சொல்ல போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம்!


V Ramanathan
நவ 09, 2025 21:28

இவர் ஒரு அந்நிய கைக்கூலி


ஜெய்ஹிந்த்புரம்
நவ 09, 2025 21:25

ராகுல்ஜி அந்த விவகாரத்தை விடக் கூடாது.


Sun
நவ 09, 2025 21:11

ஒரு காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது ஆளும் கட்சியில் ஏராளமானோர் இருந்த போதும் லோக்சபா எதிர்கட்சி தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயியை ஐ.நா. சபையில் உரையாற்ற அனுப்பினார். எதிர்கட்சி தலைவரும் இந்தியாவுக்காக ஐ.நா சபையில் முழங்கினார். வாயடைத்து போயின எதிரி நாடுகள். இந்திராவும் பெருமிதம் அடைந்தார். அப்படிப்பட்ட இடத்தில் இப்படியும் ஒரு எதிர்கட்சி தலைவரா? நூறு சதவீத இந்திய ரத்தம் தன் உடலில் ஓடினால்தான் நானும் ஓர் இந்தியன் என யாரையும் மார்தட்ட சொல்லும். இல்லாவிட்டால்?


திகழ்ஓவியன்
நவ 09, 2025 21:02

மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளை திருடுகிறார்கள் - பிஹாரில் ராகுல் குற்றச்சாட்டு


சமீபத்திய செய்தி