உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிவி பார்க்கக் கூடாது என்பது சித்ரவதை கிடையாது; மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

டிவி பார்க்கக் கூடாது என்பது சித்ரவதை கிடையாது; மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக் கூடாது என்பது எல்லாம் சித்ரவதையின் கீழ் வராது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.கடந்த 2002ம் ஆண்டு திருமணமான பெண் ஒருவர், தன் கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, 2003ம் ஆண்டு தற்கொலைசெய்து கொண்டார். இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர், கணவர் மற்றும் அவரது தாய், தந்தையர் மீது போலீஸில் புகார் அளித்தனர். அந்தப் புகாரில் டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், இதன் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு, மகள் தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து, 498ஏ மற்றும் 306 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கணவன் மற்றும் அவரது பெற்றோரை குற்றவாளிகளாக கீழமை நீதிமன்றம் அறிவித்தது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டிவி பார்க்கக் கூடாது, அண்டை வீட்டாருடன் பேசக்கூடாது , கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது என்று கூறுவதும், நள்ளிரவில் வரும் தண்ணீரை பிடிக்கச் சொல்வதும் குற்றமாகாது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், நள்ளிரவு 1.30 மணியளவில் தான் அவர் வசிக்கும் கிராமத்தில் தண்ணீர் வருவதாகவும், அதனை அந்த கிராம மக்களே பிடிக்கும் போது, அது கொடுமையின் கீழ் வராது என்றும் நீதிபதிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

skv srinivasankrishnaveni
நவ 10, 2024 07:22

இந்த கொடூரமான புத்தி ஏழை பணக்காரா என்று பேதமே இல்லாதைக்கு இருக்கு


நிக்கோல்தாம்சன்
நவ 09, 2024 21:10

டீவியை பார்ப்பதுதான் சித்ரவதையே , அதுவும் கார்பொரேட் குடும்பத்தின் சேனல்களை பார்த்திருந்தா அந்த பொண்ணு தற்கொலை செய்து கொண்டிருப்பாள் போல


எஸ் எஸ்
நவ 09, 2024 19:22

இப்போதெல்லாம் டிவி பார்ப்பதுதான் கொடுமை. அதிலும் இரவு டிவி விவாதங்களில் சில திராவிட இயக்கங்களின் பேச்சாளர்கள் பேசுவதை எல்லாம் கேட்பது...... கடவுளே..


GMM
நவ 09, 2024 18:54

கணவர் கொடுமை துவங்கிய உடன் தாய் வீடு அல்லது விவாகரத்து. இறப்பிற்கு பின் புகார் . விசாரணை, தீர்வு, குடும்ப, சமூக, நிர்வாக அமைப்புடன் முடிய வேண்டும்.கலெக்டர் பணி தான் என்ன ? இதில் கவனம் செலுத்தினால், நீதிமன்றம் முக்கிய பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. சுமுக தீர்வு முறை உண்டு.


Jayakumar
நவ 09, 2024 18:53

Work should be shared by all. She was not a slave. If it happens to a judge’s daughter, is it not a crime? Can’t she go to temple alone? Why she should bring water at midnight, when everyone is resting at home.


sridhar
நவ 09, 2024 19:20

Until a hundred years ago it was common for daughters in law to share the family burden in every way and conduct themselves in a dignified manner. They never fought for equal rights and knew their responsibilities. Today’s women are conscious of rights and not of responsibilities.


என்றும் இந்தியன்
நவ 09, 2024 18:25

2003 ல் நடந்ததற்கு இதைவிட வேகமாக தீர்ப்பு கூறமுடியாது? 21 வருஷம் தீர்ப்புக்கு என்றால் சர்வ சாதாரணம் அப்படித்தானே கோர்ட்டே. விரைவில் எதிர்பாருங்கள் இந்த மாதிரி தீர்ப்பை .


சமீபத்திய செய்தி