மேலும் செய்திகள்
பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு வாங்க கடன்
01-Mar-2025
பகர்கஞ்ச்:'எம்.சி.டி., - 311' செயலியில் பதிவு செய்யாத 1,900 மொத்த கழிவு உற்பத்தியாளர்களுக்கு விளக்கம் கேட்டு மாநகராட்சி 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.டில்லியில் பொறுப்பான கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதிலும் சுத்தமான, ஆரோக்கியமான சூழலைப் பராமரிப்பதிலும் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டிருந்தது.இதன் ஒருபகுதியாக திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, 'எம்.சி.டி., - 311' செயலியில் பதிவு செய்யும்படி, வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மொத்த கழிவு உற்பத்தியாளர்களை மாநகராட்சி கேட்டுக் கொண்டிருந்தது.மாநகராட்சி அடையாளம் கண்ட 1,075 மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் மட்டுமே இதுவரை இந்த செயலியில் பதிவு செய்துள்ளனர்.பதிவு செய்யாத 1,900 மொத்த கழிவு உற்பத்தியாளர்களுக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
01-Mar-2025