உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி எல்லாமே ஈஸி தான்; ஐயப்ப பக்தர்களுக்காக வந்தாச்சு சுவாமி சாட்பாட்!

இனி எல்லாமே ஈஸி தான்; ஐயப்ப பக்தர்களுக்காக வந்தாச்சு சுவாமி சாட்பாட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் வசதிக்காக ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட 'சுவாமி ஏ.ஐ. சாட்பாட்'டை (Swamy AI chatbot) கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்து வைத்தார்.ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் சபரிமலை ஐயப்பனுக்கு உகந்ததாகும். இந்த மாதங்களில் பக்தர்கள் விரதமிருந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்க வருவது வழக்கம். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளை பக்தர்கள் சந்திக்கின்றனர். எனவே, பக்தர்களின் வசதிக்காக சபரிமலை கோவில் நிர்வாகமும், பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.வரும் 15ம் தேதி முதல் ஐயப்ப பக்தர்களின் சீசன் தொடங்க உள்ள நிலையில், ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட 'சுவாமி சாட்பாட்'டை (Swamy chatbot) கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். பக்தர்கள் தங்களின் ஸ்போர்ட்களின் மூலமாக, பூஜை நேரம், ரயில், விமான சேவை நேரம் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும். இதன்மூலம், எளிதான, பாதுகாப்பான முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந்த ஏ.ஐ., சாட் பாட்டானது, மலையாளம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 6 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. 'இந்த முறையினால், இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பயணம், பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் இருக்கும்,' என்று கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nehru Dhanam
நவ 15, 2024 11:17

கேரளா சி ம் சார் நன்றி வணக்கம்


Nehru Dhanam
நவ 15, 2024 11:11

Very nice சார், சுவாமி சரணம் ஐயப்ப


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
நவ 13, 2024 21:31

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் உள்ள பாபர் மசூதிக்கு போய் பணத்தை கொட்டுகிறார்கள் அது ஏன் என்று கேட்டால் பாபர் ஐயப்பனுக்கு நண்பராம் அதனால் போகும் வழியில் அங்கு சென்று வாபரை தரிசிக்கிறார்களாம். ஆனால் அங்கே உள்ள ஒரு பளிங்கு கல்லில் அவர்கள் தெளிவாக செதுக்கி வைத்துள்ள வாசகம் இவ்வுலகில் அல்லா ஒருவரை தவிர வேறொரு தெய்வம் இல்லை என்று பட்டவர்த்தனமாக ஆங்கிலத்தில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். என்ன சொல்வது


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 13, 2024 22:11

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம். இந்து கோயில் இந்து வழிபாட்டில் பாபர் எங்கிருந்து வந்தார். அல்லாவுக்கு என்ன தொடர்பு. நீங்கள் சொல்வது சரிதான். இந்துக்கள் பணத்தை வாங்கி இந்துக்களுக்கு எதிராகவே பயன்படுத்துவார்கள்.


Maharajothi
நவ 14, 2024 07:21

Nalla முயற்சி ?


Dharmavaan
நவ 14, 2024 07:36

ஐயப்ப பக்தர்கள் பொது அறிவு இல்லாமல் இதை ஏன் நம்புகிறார்கள் ஐயப்பன் காலமென்ன முஸ்லீம் காலமென்ன இது இந்து தேவதை கோயில் பெயர் மாற்றி பாபர் கோயிலாகியது இதனால் ஹிந்து எதிர்ப்பு விஷத்தை வளர்க்கிறோம் பக்தர்கள் திருந்த வேண்டும் இதற்கான பிரச்சாரம் அதிகமாக வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை