உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி பயங்கரவாதிகள் தான் பயந்து நடுங்க வேண்டும்! பாதுகாப்பான இந்தியா அமைய பல்லவி மஞ்சுநாத் விருப்பம்

இனி பயங்கரவாதிகள் தான் பயந்து நடுங்க வேண்டும்! பாதுகாப்பான இந்தியா அமைய பல்லவி மஞ்சுநாத் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை வேட்டையாடினர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பாதுகாப்பான இந்தியா தான் நமக்கு வேண்டும்,'' என, காஷ்மீரில் கொல்லப்பட்ட கர்நாடக தொழிலதிபர் மஞ்சுநாத்தின் மனைவி பல்லவி கூறினார்.காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமடைந்தனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் என்பவரும் ஒருவர். இவரது மனைவி பல்லவி மற்றும் மகனுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றார். பயங்கரவாதிகள் நடத்திய மனித வேட்டை குறித்து, பல்லவி கூறிய கருத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரை கொன்றபோது, தங்களையும் கொன்று விடுங்கள் என பல்லவி மன்றாடினார். அப்போது பயங்கரவாதிகள், 'உங்களை கொல்ல முடியாது. மோடியுடன் போய் சொல்' என கொக்கரித்தனர். பிரதமர் மோடிக்கு பகிரங்க மிரட்டல் விடுப்பது தான், பயங்கரவாதிகள் நாட்டுக்கு சொல்ல வந்த சேதி. நாட்டின் பிரதமருக்கு எதிராக, அரசு நிர்வாகத்துக்கு எதிராக பயங்கரவாத குரல் ஓங்கி ஒலித்ததற்கு, சாட்சியான பல்லவி, ஏப்., 22ல் பஹல்காமில் நடந்த கோர கொலையை விவரிக்கிறார்.பத்திரிகையாளர் ஆர்னாப் கோஸ்வாமிக்கு அவர் அளித்த பேட்டி: நாங்கள் மூன்று பேர் - நான், எனது கணவன், மகன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றோம். பஹல்காமில் இருக்கிறோம். பகல் 1.30 மணி என நினைக்கிறேன். திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அது ஒரு பயங்கரவாத தாக்குதல் என தெரியாது. அது ஒரு கெட்ட கனவு.நாங்கள் நின்ற பகுதியில் திடீரென நான்கு பயங்கரவாதிகள் வந்தனர். என் கணவர் சுதாரித்து, எங்களை பார்த்து, 'நீங்கள் இங்கிருந்து சென்றுவிடுங்கள்' என கூறினார். அதற்குள் பயங்கரவாதிகள், என் கண் முன்னே கணவரை சுட்டுக்கொன்றனர். அப்போது நான், 'என் கணவரை கொன்று விட்டீர்கள்... எங்களையும் கொன்று விடுங்கள்' என்றேன். உடனே அங்கிருந்த ஒரு பயங்கரவாதி, ஹிந்தியில், 'நஹின் மாரங்கே... தும் மோடி கோ ஜாகே போலோ (நான் உன்னை கொல்ல மாட்டேன். மோடியிடம் போய் சொல்)' என்றார். பின்னர், பயங்கரவாதிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். அங்கிருந்த உள்ளூர் மக்கள் குதிரைகளுடன் வந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். எல்லா இடங்களும் நமது சொந்த ஊர் போல் கருதியிருந்தேன். ஆனால், பஹல்காமில் எந்த பயமுமின்றி பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர். அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடி வருகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதுகாப்பான இந்தியா தான் நமக்கு தேவை. நாம் இந்தியர்கள். இனி இந்திய மக்கள் அச்சப்பட கூடாது. பயங்கரவாதிகள் தான் பயந்து நடுங்க வேண்டும். இவ்வாறு, பல்லவி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஏப் 26, 2025 12:10

பாக்கிஸ்தான் நாடு உலக வரைபடத்தில் இல்லாமல் அழிக்கப்படவேண்டும். மேலும் பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவாக செயல்படும் நம்நாட்டில் உள்ள தேசதுரோகிகள் கூட முற்றிலும் அழிக்கப்படவேண்டும் .


Ajay Dev
ஏப் 26, 2025 11:18

இந்தியா, அனைத்து மதத்தினரின் வாழ்வியல் கூடம் ஒரு சுற்றுலா சென்ற பயணிகளை இரக்கமின்றி கொன்ற பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் 3 லட்சம் காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா என்பதை மறந்து விடக்கூடாது சுற்றுலா மூலம் வரும் வருவாயை தங்கள்வாழ்வியலுக்கு காஷ்மீர் மக்கள் பயன்படுத்துகின்றனர் தீவிரவாத செயல்களால் காஷ்மீர் மக்களின் பொருளாதாரம் கேள்விகுறியாகி விடும் ஜனநாயகம் தலைக்கும் வேலை தீவிரவாதம் வேரூண்ட உள்ளர் மக்கள் ஆதரவு அளிக்க கூடாது, தேசிய பாதுகாப்பில் மத்திய அரசு சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்


க.அய்யர்ராஜா
ஏப் 26, 2025 11:02

நீங்கள் கூறிய கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும்.நமது இராணுவம் இதனை செயல்படுத்த வேண்டும்


Padmasridharan
ஏப் 26, 2025 10:43

"பயங்கரவாதிகள்.. பாதுகாப்பான இந்தியா.. " ஓர் / பல உயிர்கள் போனால்தான் பயங்கரவாதமா. . அரசு அதிகாரிகள் பணத்துக்காக மற்றவர்களை, அதட்டி_மிரட்டி அதிகார பிச்சை எடுப்பதும் இது போன்றே ஆகும். இந்த மாதிரி கரை படிந்த அரசு அதிகாரிகளால் எத்தனையோ பேர் உயிரோடு இருக்கும் சடலங்கள்தான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 26, 2025 10:42

தீவிரவாதிகள் துணிவுடன் அச்சமின்றி நடமாடுகிறார்கள் .... மக்கள்தான் சில இந்தியப் பகுதிகளுக்கு அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது என்று சரியாகச் சொன்னார் அந்த வீரப்பெண்மணி ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 26, 2025 10:32

இந்த பெண்மணியின் மன தைரியம் தான் இப்போது நமக்கு தேவை. நாடு முழுக்க இவர் குரல் ஒலிக்க வேண்டும்.


KANNAPPA DHARMS
ஏப் 26, 2025 10:17

Do not term them as "பயங்கராவதிகள்" right word is "பொட்டைகள்"


balakrishnankalpana
ஏப் 26, 2025 09:20

முதுகெலும்பு இல்லாத கோழைகள்..


N Annamalai
ஏப் 26, 2025 07:39

பயங்கரவாதத்தை அடியோடு நசுக்க வேண்டும் .சிறு குற்றங்களை சிறு அளவில் செய்யும் போதே தண்டனை கொடுத்து விட வேண்டும் .நாட்டிற்கு எதிராக யார் பேசினாலும் சுட வேண்டும் .தவறு செய்தால் அரசு மேல் பயம் வர வேண்டும் .


R Dhasarathan
ஏப் 26, 2025 09:06

நேரம் கடத்தும் நீதித்துறை மேல் நம்பிக்கை பலமுறை இழந்து விடுகிறோம். என்ன காரணமோ இவ்வாறு நடைபெறுவதற்கு எல்லோரும் காரணமாக ஆகிவிடுகிறோம்