மேலும் செய்திகள்
நொய்யல் கரையோர ரோடுகள் கைகொடுத்தன
29-May-2025
பாட்னா: பீஹாரில் அணு மின் நிலையம் அமைக்க உதவுவோம் என்று மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறினார்.இன்று பாட்னாவில் கிழக்குப் பிராந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 5வது மின்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பீஹார் மாநிலத்தின் எதிர்கால எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணு மின் நிலையம் அமைப்பதை முறையாக முன்மொழியப்பட்டது. இதனையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து மனோகர் லால் கட்டார் அளித்த பேட்டி:இந்த மாநாடு, மாநிலத்தில் எரிசக்தி தன்னிறைவை நோக்கிய ஒரு பெரிய படியாகும். 2035 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் குறைந்தது ஒரு அணு மின் நிலையத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்டத்தையும் மத்திய அரசு வகுத்துள்ளது.பீஹாரில் அணு மின் நிலையம் மற்றும் 1,000 மெகாவாட் பேட்டரி சேமிப்பு திறன் கொண்ட அலகு அமைக்கப்படும். ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைத்தல், 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுதல் மற்றும் துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துதல் போன்ற மின் துறையில் பீஹார் அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.கோடையில் நிலைமையைச் சமாளிக்க, பீஹார் அரசு அணு மின் நிலையத்திற்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்க வேண்டும் என்று கோரியது. அந்தந்த மாநிலங்களில் குறைந்தது ஒரு அணு மின் நிலையத்தை அமைக்குமாறு மாநிலங்களைக் கேட்டுள்ளோம். மாநிலத்தில் அணு மின் நிலையம் அமைக்க நாங்கள் உதவுவோம்.இதன் மூலம் மாநிலத்தின் மின்தட்டுப்பாடு மற்றும் ஆற்றல் தேவைகளை சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு மனோகர் லால் கட்டார் கூறினார்.
29-May-2025