உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜலிங்கம் தகவல்

வாரணாசி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜலிங்கம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி : “அயோத்தியில் பாலராமர் கோவில் திறந்தபின், வாரணாசிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, 14 கோடியை தாண்டி விட்டது,” என, வாரணாசி வருவாய் துறை கோட்ட கமிஷனர் ராஜலிங்கம் தெரிவித்தார்.தென்காசி மாவட்டம் கடையநல்லுாரைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர், 2006ல், உ.பி., பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், மீண்டும் தேர்வு எழுதி, 2009ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்று, உ.பி.,யின் வாரணாசியில் கோட்ட கமிஷனராக தற்போது பணியாற்றி வருகிறார்.காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக, தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களுக்கு, அவர் அளித்த பேட்டி: தமிழகத்திற்கும் காசிக்கும் வரலாற்று ரீதியாக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆதி சங்கராச்சாரியார் காசிக்கு நடந்து வந்து, சீடர்களுக்கு வேதங்களை கற்பித்துள்ளார்.காசிக்கு வரும் பக்தர்கள், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். காசி என அழைக்கப்படும் வாரணாசி நகரம், தெருக்கள் நிறைந்தது; மக்கள் அடர்த்தியும் அதிகம். இங்கு, 30 லட்சம் பேர் வசிக்கின்றனர். தற்போது தினசரி பக்தர்களின் வருகை, இரண்டு லட்சத்தை தாண்டி விட்டது.கடந்த ஆண்டு வாரணாசிக்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை, 11 கோடியாக இருந்தது. அயோத்தியில் பால ராமர் கோவில் திறப்புக்கு முன், ஆண்டுக்கு, ஒரு கோடி பக்தர்களே வந்து சென்றுள்ளனர். அக்கோவில் திறப்புக்கு பின், பக்தர்களின் வருகை பல கோடியை தாண்டி விட்டது. அதன்படி, இந்த ஆண்டில், செப்., வரை, பக்தர்களின் வருகை, 14 கோடியை தாண்டி விட்டது.பிரதமர் மோடியின் ஒரே பாரதம்; உன்னத பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டத்தின் கீழ், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன்படி, காசிக்கும், தமிழகத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க இணைப்பை வலுப்படுத்தும் விதமாக, நான்கு ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.இந்த ஆண்டு, 'தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. சங்கமத்தின் இறுதி நாள் நிகழ்ச்சி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நடத்தப்படும். அதற்காக, வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழ் கற்க, தமிழகம் செல்ல உள்ளனர்.ஆசியாவிலேயே முதன்முதலாக, பிரதமர் மோடி, 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'ரோப் கார்' திட்டத்தை, 2023ல் துவக்கி வைத்தார். இப்பணிகள், 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டன. ரோப் கார் சேவை, வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் வரை இயக்கப்படுகிறது. இச்சேவை காரணமாக, 16 நிமிடங்களில் கோவிலுக்கு சென்று விடலாம். சாலை மார்க்கமாக சென்றால், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rathna
டிச 16, 2025 11:40

காசி விஸ்வநாதர் கோவில் சீரமைக்கப்பட்டபின் அங்கு பொருளாதார நடவடிக்கைகள் 1.25 லக்ஷம் கோடியாக அதிகரித்து உள்ளது. 25 கோடிக்கும் மேல் சுற்றுலா பயணியர்கள் வந்து சென்று உள்ளனர். 1 லக்ஷம் கோடி என்பது ஒரு மாநிலத்தையே பொருளாதார ரீதியில் சீரமைக்கும். உதாரணத்திற்கு காஞ்சிபுரத்தை எடுத்து கொள்ளுங்கள். அங்கே 150க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளது. காசியை போல ஒரு திட்டம் காஞ்சிபுரத்திற்கு வந்தால் அந்த நகரத்தின் வளர்ச்சி எட்ட முடியாத நிலையை அடையும். இருக்கிற கோவில்களை ஒடுக்க நினைக்கும் அரசியல்வாதிகள் இதை தெரிந்து கொள்வார்களா?


Kasimani Baskaran
டிச 16, 2025 03:56

சிறப்பு.


Santhanam
டிச 16, 2025 02:49

ரொம்ப முக்கியம்... என்னமோ இந்த கோயிலை கட்டுனதுக்கு அப்புறோம் நாடே செழிச்சிடும்னு சொன்னாங்க காவி கயவர்கள்... தங்கம் ஒரு லட்சத்தை எட்டுனதும், ருபாய் அதலபாதாளம் போனதும், பெட்ரோல் விலை 100 அ தாண்டுனதும், வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரிச்சு ஆடுறதும்தான் மிச்சம்...


N Sasikumar Yadhav
டிச 16, 2025 05:55

கும்மிடிப்பூண்டி ஒசூர் தாண்டி பாருங்க பாரதம் பரந்தூவிரிந்து இருக்கிறது கும்மிடிப்பூண்டி தாண்டாதவனெல்லாம் கருத்தை சொல்ல வந்துட்டாரு


vivek
டிச 16, 2025 06:17

சரி சரி சந்தானம்...சொல்லிட்டு டாஸ்மாக் கிளம்பு...அரசுக்கு உன்னால் வருவாய் வரணும்ல


ThamizhMagan
டிச 16, 2025 06:30

யார் சொன்னாங்க? நீ ஏன் நம்பினாய்?


Skywalker
டிச 16, 2025 08:11

Nobody said the nation will flourish after temple is built, if you believed it's your wish, the temple was built on donation funds by Hindus, calling hindu temples as useless and economically worthless while there are millions of churchs and mosques in india which serves no economical or national purpose, so shall we remove them all? Religion is for people and their beliefs, not for the economy or national development, unlike you guys who use state funds and taxpayers money for building stupid statues for karunanidhi, periyar, etc, what economic purpose do they serve?


Prabaharan P
டிச 16, 2025 10:09

நீயெல்லாம் எதுக்கு


முக்கிய வீடியோ