உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பிரதேசம்: ஐகோர்ட்டில் பாக்., அரசு ஒப்புதல்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பிரதேசம்: ஐகோர்ட்டில் பாக்., அரசு ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் , ஒரு வெளிநாட்டு பிரதேசம் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வசித்து வந்த காஷ்மீர் கவிஞர் மற்றும் பத்திரிகையாளருமான அஹமத் பர்ஹத் ஷாவை, அவரது வீட்டில் இருந்து அந்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் கடத்திச்சென்றனர். அவரை மீட்டுத் தரும்படி அவரது மனைவி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி மோஷின் அக்தர் கயானி, கடத்தப்பட்ட அஹமத் பர்ஹத் ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார்.இந்த வழக்கு நேற்று முன்தினம்( மே 31) விசாரணைக்கு வந்த போது பாகிஸ்தான் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறியதாவது: பர்ஹத் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளார். இதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒரு வெளிநாட்டு பிரதேசம். அதற்கு என தனி அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றம் உள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றத்தின் உத்தரவுகள், அங்கு வெளிநாட்டு நீதிமன்ற உத்தரவுகளாகவே கருதப்படும் என்றார்.இதனை கேட்ட நீதிபதி கயானி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பிரதேசம் என்றால், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ரேஞ்சர்கள் எப்படி அங்கே உள்ளே நுழைந்தனர் எனக்கேள்வி எழுப்பியதுடன், உளவுத்துறையினர் கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது என கண்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

A1Suresh
ஜூன் 02, 2024 21:55

பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் கைவிட்டு போனால் உடனே கைபர் பக்தூன்வா மற்றும் பலூசிஸ்தானும் கைவிட்டு போகும். எனவே முதல் விக்கெட் விழுவது தான் கடினம். மேலும் பாக்.ஆகிரமிப்பு காஷ்மீர் இருபகுதிகளாக உள்ளன. ஒன்று கில்ஜிட்-பல்டிஸ்தான் என்ற மிகப்பெரிய பகுதி. அடுத்தது முசாபராபாத் என்ற சிறிய பகுதி. இவைகளுள் எது பிரிந்தாலும் பாகிஸ்தான் சிதறிப்போகும்


GMM
ஜூன் 02, 2024 19:21

பாகிஸ்தான் முழுவதும் இந்தியாவிற்கு உட்பட்ட வெளிநாட்டு பிரதேசம். இந்திய நீதி, நிர்வாகம் கீழ் பாக். கொண்டுவர வேண்டும். அது போல வங்காளதேஷ். இறுதியாக ஆப்கானிஸ்தான். குற்றம் நிரூபிக்கபடும் இஸ்லாம் மக்களுக்கு தண்டனை மட்டும் சவுதி அரேபியா தர வேண்டும்.


J.V. Iyer
ஜூன் 02, 2024 19:12

POK பகுதியை ஹிந்துஸ்தானுடன் இணைத்தால் வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டு கதையாகிவிடும். இங்கு முக்கால்வாசிபேர்கள் பயங்கரவாதிகள். இவர்களை ஹிந்துஸ்தானுக்குள் விட்டால் வேறு வினையே இல்லை. இவர்களையெல்லாம் போர்க்கிஸ்தானுக்குள் முதலில் விரட்டவேண்டும். இதற்கு பலகாலம் ஆகலாம்.


Vijay D Ratnam
ஜூன் 02, 2024 21:32

நண்பரே POK இந்தியாவின் பகுதி. இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் தனி நாடாக உருவானபோது காஷ்மீர் மாகாணத்தின் மஹாராஜா ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவோடுதான் இணைத்துக்கொண்டார். இஸ்லாமிய நாடான பாகிஸ்தானோடு ஒருக்காலும் இணைய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் கையாலாகாத்தனத்தால் காஷ்மீரின் மேற்கு பகுதியை பாகிஸ்தான் அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு செய்தது. அந்த நிலம்தான் நமக்கு சொந்தமானது. அதை பாகிஸ்தான் நாட்டு மக்கள் ஆக்கிரமித்து வைத்து இருக்கிறார்கள். ஒங்க வீட்டை ஆக்கிரமிப்பு செய்தவனிடம் இருந்து மீட்கும்போது வீட்டை மட்டும் மீட்பீர்களா அல்லது அவனையும் கூட்டிக்கொண்டு வந்து ஒங்க வீட்ல சோறு போட்டு வளர்ப்பீங்களா. இந்தியாவுக்கு சொந்தமான இடத்தில் அத்து மீறி நுழைந்து வசிப்பவர்கள் பாகிஸ்தானியர்கள், இஸ்லாமியர்கள். அவர்களுக்கு என்று சொந்தமாக ஒரு நாடு இருக்கிறது. அவர்கள் இந்தியர்கள் அல்ல நண்பரே.


subramanian
ஜூன் 02, 2024 18:58

பாகிஸ்தான் சொல்வதால் நாம் பயங்கரவாத ஆதரவு நாட்டிடம் மென்மையை கடைபிடிக்க முடியாது. இது நம்மை ஏமாற்றும் முயற்சி. நாம் நம்முடைய எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இப்போது பயங்கரவாதிகளை கூட்டமாக அனுப்புவார்கள். நாம் எல்லை தாண்டும் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ள வேண்டும். பேச்சு வார்த்தை, கிரிக்கெட் மேட்ச் என்றெல்லாம் பல்லை இளித்தால் மற்றுமொரு ஊடுருவல் செய்வார்கள்.


subramanian
ஜூன் 02, 2024 18:52

சார் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதுமே பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதிதான். இனிமேல் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் . உங்கள் தேச பற்று போற்றுதலுக்கு உரியது .


Jai
ஜூன் 02, 2024 17:51

நல்ல தீர்ப்பு. இந்தியாவுடன் இணைய தயார் ஆகி வருகின்றனர்.


sankar
ஜூன் 02, 2024 17:29

ஆகா அந்த பகுதிகள் விரைவில் பாரதத்துடன் சேரும் - அடுத்த ஆப்பரேசன் ரெடி


N Sasikumar Yadhav
ஜூன் 02, 2024 17:03

இனிமேல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகண்ட பாரதத்தின் ஒரு அங்கம் .


j rajan
ஜூன் 02, 2024 19:38

சரி சரி .... அவ்வாறே ஆகட்டும்


j rajan
ஜூன் 02, 2024 19:43

சரி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை