உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்துார் விமர்சித்த அதிகாரி கைது

ஆப்பரேஷன் சிந்துார் விமர்சித்த அதிகாரி கைது

போடாட்:நம் பாதுகாப்பு படையினரின் 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி ஆட்சேபத்துக்குரிய கருத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசு அதிகாரியை குஜராத் போலீசார் கைது செய்தனர்.பயங்கரவாதத்துக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. இதில், தேச ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் உள்ள துருபனியா கிராம பஞ்சாயத்து அதிகாரி கிரிபால் படேல், 27, என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஆப்பரேஷன் சிந்துார் பற்றி ஆட்சேபத்துக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.இதை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து, படேலின் சமூக வலைதள பதிவை நீக்கியதுடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தேச ஒற்றுமைக்கு தீங்கு விளைவிப்பதும், இந்திய குடிமக்களிடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் கிரிபால் படேல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவரை கைது செய்துள்ளோம். இதேபோல் கருத்து பதிவிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை