உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலை பிரதேசங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் சிரமப்பட்டு பயணிக்கும் அதிகாரிகள்

மலை பிரதேசங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் சிரமப்பட்டு பயணிக்கும் அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம ஓட்டுச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை இந்திய தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முதல்கட்டம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை (ஏப்.,19) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கொண்டு செல்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kisrix3o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம ஓட்டுச்சாவடிக்கு அதிகாரிகள் பயணம் செய்யும் வீடியோவை இந்திய தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது. அதில், அதிகாரிகள் பாதையே இல்லாத மலைக்கிராமத்தில் உள்ள மக்களிடம் ஓட்டுகளை பதிவு செய்ய, மர வேர்களை பிடித்து ஏறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஜனநாயக கடமை ஆற்றிட தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அதிகாரிகள் சிரமப்பட்டாவது ஒத்துழைக்கும் நிகழ்வை பலரும் பாராட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Hari Bojan
ஏப் 18, 2024 15:57

மோடிஜி அவர்களின் பார்வைக்கு பட்டுவிட்டால் போதும் இந்த குறையும் விரைவில் தீர்ந்துபோகும்


Jaganathan R
ஏப் 18, 2024 15:27

ஒரு நாளைக்கு போறதுக்கே இவ்வளவு சிரமமாக இருக்கிறது என்றால் அங்கு வசிக்கும் மக்கள். நிலை


ديفيد رافائيل
ஏப் 18, 2024 15:26

அவர்களின் வேலையை கடமை தான் அவர்கள் செய்கின்றனர்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை