வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கச்சா எண்ணெய் எவ்வளவு விலை குறைந்தாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைப்பு இருக்காது, ஆனால் விலை அதிகரித்தால் விலை உயர்வு நள்ளிரவு முதலே அதிகரித்து விடும். ஒன்றிய பாஜக அரசு விலை குறைப்பின் பயனை மக்களுக்கு அளிக்க மனமில்லை. பெரு நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும். ஆனால் சாமானிய மக்களுக்கு செய்யாது.
இந்தியாவில் மட்டுமல்ல , எல்லாநாடுகளிலும் இதே மாதிரிதான் , இங்கிலாந்து பெட்ரோல் விலை இந்தியா ரூபாய் மதிப்பில் 152 , இத்தனைக்கும் அரபு நாடுகளிலிருந்து குழாய் வழியாக கச்சா ஆயில் ஐரோப்பா வருகிறது , ஆனால் இந்தியாவிற்கு கப்பல் வழியாகத்தான் வர வேண்டும் , பிஜேபி இல்லை காங்கிரஸ் அல்லது யார் வந்தாலும் ஒன்றும் செய்யமாட்டார்கள், அரசாங்கத்திற்கு மிக சுலபமான வரி வருமானம் இதுதான்
ஏற்கனவே பெட்ரோல் விலையை மிகவும் அதிகமாக ஏற்றி வைத்து உள்ளது மத்திய பாஜக அரசு, இனிமேல் ஏற்றுவதற்கு என்ன உள்ளது?
விலையை ஏற்றுவார்களே தவிர குறைக்க மாட்டார்கள்.விலையை குறைக்க வேண்டாம்.ஏற்றவும் வேண்டாம். இப்படியே இருக்கட்டும்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் தாண்டும் வரை இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை ஏற்ற கூடாது. இத்தனை வருடங்கள் மக்களை ஏமாற்றி முட்டாளாக்கி வருகிறார்கள். உலக சந்தையில் விலை ஏறும் பொழுது விலையை ஏற்றுபவர்கள், உலக சந்தையில் விலை குறைந்தால் ஏன் இந்தியாவில் விலையை குறைக்காமல் அதே விலையிலையே தக்க வைக்கிறார்கள் ? யார் முட்டாள்கள் என்று மக்களே யோசியுங்கள். பாஜக கட்சிக்கு கூஜா தூக்கும் அந்த சொம்புகளுக்கும் அதே விலை தானே ? உங்களுக்கு என்ன தனி டிஸ்கோவுண்ட் ஆ தருகிறார்கள். நடுநிலையுடன் சிந்திக்கணும்.
விலையை குறைத்தால் விடியலார் பஸ் கட்டணத்தை குறைப்பாரா
திமுக தேர்தல் வாக்குறுதிபடி பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைத்து விட்டதா?. எரிவாயு மானியம் 500 எங்கே?. ஆனால் சென்ற 3 ஆண்டுகளில் மத்திய அரசு மூன்றுமுறை பெட்ரோல் வரியைக் குறைந்துள்ளது .
2022 ஆம் ஆண்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் அளவில் இருந்த பொழுது இந்தியாவில் உச்சம் தொட்டது பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல். பிறகு மே 2023 இல் 64 டாலர் ஆக பெருமளவில் விலை குறைந்தது. அப்போது பெட்ரோல் டீசல் விலை குறைக்க படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 2025 கூட 55 டாலர் என்ற அளவில் வெகுவாக குறைந்தது. அப்போதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஏற்றிய விலையை ஏற்றிய படியே இந்தியாவில் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் மேலே தான் உள்ளது, விலை குறைக்கவே இல்லை. யார் பாக்கெட்டுக்கு அந்த மக்கள் பணம் சென்றது என்பதை நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும். இப்போது வெறும் 25 டாலர் விலை மேலே போனவுடன் மீண்டும் விலையை கூட்ட பார்க்கிறார்கள். யார் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்
மேலும் செய்திகள்
போர் பதற்றம்: போதுமான கச்சா எண்ணெய் இருக்கிறது
13-Jun-2025