உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலக்காட்டில் முதியோர் இல்லம் திறப்பு

பாலக்காட்டில் முதியோர் இல்லம் திறப்பு

கேரளா பிராமண சபா சார்பில் ஆனந்த குடிர் டிரஸ்ட், பாலக்காட்டில் கட்டிய முதியோர் இல்லத்தை சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமை அதிகாரி பி ஏ முரளி நேற்று ( ஆக17) திறந்து வைத்தார். விழாவில் கேரள மகாஜன சபா நிர்வாகிகள் மற்றும் நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில் ரூ 5. லட்சம் நன்கொடையை முரளி வழங்கினார்.இந்த இல்லத்திற்கு சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிது சேகர பாரதீ சன்னிதானம், 2020 ம் ஆண்டு, ரூ.50,001 அளித்து அடிக்கல் நாட்டினார். சிருங்கேரி சாரதா பீடத்தின் பாலக்காடு கிளையின் ஸ்ரீ சாரதா கோவிலுக்கும், வேத பாடசாலைக்கும் பி ஏ முரளி சென்றார். அப்பாட சாலையில் 40க்கும் மேற்பட்ட வித்தியார்த்திகள் வேதம் பயன்று வருகின்றனர்.விழாவில் கேரள பிராமண சபா முன்னாள் தலைவர் மற்றும் குளோபல் பிராமணர் கூட்டமைப்பின் தலைவர் கரிம்புழா ராமன் எச் கணேஷ், கேரள பிராமண சபாவின் மாநில தலைவர் ஸ்ரீசிவராம கிருஷ்ணன், கேரள பிராமண சபையின் மாவட்ட தலைவர் என்.ஏ. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை டிரஸ்டின் தலைவர் சிதம்பரநாதன், நிர்வாகிகள் வெங்கடேஸ்வர சர்மா, ஆடிட்டர் வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sokkalingam
ஆக 19, 2024 09:24

நன்றி, முதியோர் இருபாலருக்கும் தங்கும் வசதிகள் உள்ளதா..... இதன் விதிமுறைகள் மற்றும் கட்டணம் விபரங்களையும் அனைத்து மதத்தின் முதியோர் தங்கலாமா?என்ற விபரமும் தெரிவிக்கவும்


karutthu
ஆக 18, 2024 19:14

பாலக்காட்டில் சிருங்கேரி மடம் சார்பில் முதியோர் இல்லம் திறந்ததில் நன்றி .அதன் Rules&Regulation தங்கும் வசதி , உணவுவகைகள் மாதம் தங்கும் செலவு இதையும் தெரிவித்தால் மிக்க நன்றி


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை