உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் மூதாட்டி சுஜாதா பட்டும் பல்டி

தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் மூதாட்டி சுஜாதா பட்டும் பல்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'தர்மஸ்தலா சென்ற என் மகள் காணாமல் போனதாக, போலீசில் நான் அளித்தது பொய் புகார் தான். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்' என, எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம், சுஜாதா பட் கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளார். கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து, எஸ்.ஐ.டி., விசாரணை நடக்கிறது. இவ்வாறு புகார் கூறிய சின்னையா, தான் பொய் புகார் அளித்ததாக கூறியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், 'தர்மஸ்தலாவுக்கு கடந்த 2002ல் சென்ற என் மகள் அனன்யா பட் காணாமல் போனார். அவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்' என்று, உடுப்பியை சேர்ந்த சுஜாதா பட், 72 என்ற பெண், கடந்த 15ம் தேதி பெல்தங்கடி போலீசில் புகார் செய்தார். அங்கு பதிவான வழக்கு, எஸ்.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 26 மற்றும் 27ம் தேதி பெல்தங்கடி எஸ்.ஐ.டி., அலுவலகத்தில், சுஜாதா பட் விசாரணைக்கு ஆஜரானார். நேற்று மூன்றாவது நாள் விசாரணைக்கு ஆஜரானார். சுஜாதா பட் குறித்து ஏற்கனவே உடுப்பி, ஷிவமொக்கா, குடகு, பெங்களூரில் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்து தகவல் சேகரித்தனர். அந்த தகவலின்படி, சுஜாதா பட்டிற்கு திருமணம் ஆகவில்லை என்பதும்; அவருக்கு மகளே இல்லை என்பதும் தெரிந்தது. இதுதொடர்பான ஆதாரங்களை முன்வைத்து, நேற்று அவரிடம் விசாரித்த போது திக்குமுக்காடினார். கடைசியில், பொய் புகார் அளித்ததை ஒப்புக் கொண்டார். அவர் கூறியதாக எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கூறியதாவது: உடுப்பி மணிப்பால் மருத்துவமனை அருகே, எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை தர்மஸ்தலாவுக்கு என் குடும்பத்தினர் தானமாக எழுதி கொடுத்தனர். அந்த இடத்தை திரும்ப தரும்படி கேட்ட போது, தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தினர் மறுத்து விட்டனர். கோபத்தில் கோவில் நிர்வாகத்தினரை பழிவாங்க நினைத்து, போலீசில் பொய் புகார் அளித்தேன். தெரியாமல் செய்து விட்டேன்; தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள். இவ்வாறு கூறி, கதறி அழுது உள்ளார். எஸ்.ஐ.டி., விசாரணையில் சின்னையா, சுஜாதா பட்டை பின்னால் இருந்து இயக்கியது, ராஷ்டிரிய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி மற்றும் அவரது குழு என்பது தெரிந்துள்ளது. சுஜாதா பட் பொய் புகார் அளித்திருப்பதால், அவரும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஆக 29, 2025 22:30

ஆடு காணாம போன மாதிரி கனவுதான் கண்டேன்.


கண்ணன்
ஆக 29, 2025 09:39

எவ்வளவு பணம் யார் கொடுத்தார்கள் என்பதனைச் சொல்லிவிட்டு அழவும்


bgm
ஆக 29, 2025 08:46

koovaalu க்கு இது ஒண்ணும் புதுசு இல்ல. ஏற்கனவே ஆளுநர் மாளிகை மீத ஆதாரம் இல்லாத சேற்றை வாரி இறைத்து பின்னர் கோர்ட் படி ஏறி மன்னிப்பு கேட்டார். பின்னர் வெளியே வந்து உதார். இப்போ மறுபடி மனிப்பு...இதெல்லாம் சகஜமப்பா


VENKATASUBRAMANIAN
ஆக 29, 2025 08:04

காங்கிரஸ் அரசில் இதெல்லாமே சகஜம்.


Padmasridharan
ஆக 29, 2025 07:20

பொய் சொன்னாலே கைது செய்யணும்னா மொதல்ல மக்களை ஏமாத்தி பணம் பறிக்கும் பல காவலர்களையும் நிறைய குற்றங்களுக்கு வித்திட்டவர்களாக கைது செய்ய வேண்டும் சாமி.


V Venkatachalam
ஆக 29, 2025 10:26

அப்புடி யா?


V K
ஆக 29, 2025 06:46

நக்கீரன் கோவாலு பாவம் அவன் பாட்டு சகட்டு மேனிக்கு கதை விட்டுக்கினு இருந்தான் அவன் பிழைப்பில் மண்ணு விழுந்தது


சாமானியன்
ஆக 29, 2025 06:36

தர்மசாலா கோவிலை நன்றாக கழுவி விட்டு பூஜை,புணஸ்கார பரிகாரங்களை செய்ய முதல்வர் சித்தராமைய்யாவிடம் கோரிக்கை வைக்கிறேன். இனிமேல் நடப்பது நல்லதாக அமையட்டும். சீசீடீவி நிறைய வைக்கவும்.


Sri
ஆக 29, 2025 06:18

அதெப்படி சிபிஐ பணியாற்றிய ஓய்வு பெட்ரா பெண் அதிகாரி பொய் கூற வாய்ப்பு. அதுவும் பெண் பிள்ளை காணவில்லை என பல வருடங்களாக புகார் கூறியுள்ளார்.


V Venkatachalam
ஆக 29, 2025 10:36

அருமையான கேள்வி சூப்பரான கேள்வி. ஒரு சி பி ஐ ஆபீஸருக்கே கூட தோணாத கேள்வி.. அபாரமான கேள்வி. முரசொலி படித்து படித்து மண்டை மழுங்கி போன கேள்வி.


Natarajan Mahalingam
ஆக 29, 2025 04:56

பணத்திற்காக தர்மஸ்தலா பெயரை கெடுக்க பெரிய பொய் சொல்லிய இவர்கள் ஒரு மாதமாவது சிறை செல்வது நல்லது. மன்னிப்பது தவறான முன் உதாரணம் ஆகி விடும்.


Mani . V
ஆக 29, 2025 04:35

பல்டி அடிக்கவில்லையென்றால் காணாமல் போய் விடுவோம் என்ற பயம் இருக்கத்தானே செய்யும்.