உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சிகளுக்கு நடத்தை விதி : ஓம் பிர்லா வலியுறுத்தல்

கட்சிகளுக்கு நடத்தை விதி : ஓம் பிர்லா வலியுறுத்தல்

பாட்னா :பீஹார் தலைநகர் பாட்னாவில், 85வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு, இரு நாட்களாக நடந்தது. மாநாட்டின் நிறைவு அமர்வில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:சட்டசபைகளின் கண்ணியத்தை நிலைநிறுத்த, அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். தங்களின் எம்.எல்.ஏ.,க்களுக்கான நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம். கடந்த 1947 முதல் இன்று வரையிலான பார்லி., விவாதங்கள், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட, 22 மொழிகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல, மாநில சட்ட சபைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜன 22, 2025 08:42

பா.ஜ எதிர்க்கட்சியா இருந்த போது என்ன அட்டுழியம் பண்ணாங்க... போங்க போங்க.


Kasimani Baskaran
ஜன 22, 2025 07:18

மாநில அரசு மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் மாநில நலனுக்கு உகந்த வகையில் பணியாற்றும் ஒரு அமைப்பு. சுயாட்சி, தனிப்பட்ட அதிகாரம் என்றெல்லாம் கிடையாது. எந்த மசோதாவும் மத்திய அரசின் அங்கீகாரத்துக்கு பின்னரே சட்டமாகும் - ஆனால் அப்படி சட்டமாகும் மசோதாக்கள் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்தாது. நாட்டுக்கு எதிராக அல்லது மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டால் மத்திய அரசின் நிர்வாகத்தின் பரிந்துரையில் பெயரில் மாநில அரசு ஜனாதிபதியால் கலைக்கப்படலாம். நீதிமன்றம் கூட ஜனாதிபதியை விசாரிக்க முடியாது தற்போழுது நீதிபதிகள் சட்டத்தை வளைத்து கேள்வி கேட்பதில் சூரர்கள்


தாமரை மலர்கிறது
ஜன 21, 2025 23:40

வரம்பு மீறும் அப்பாவு போன்றவர்களை சபாநாயகர் பதவியிலிருந்து தூக்க, ஓம் பிர்லாவிற்கு மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும்.


Barakat Ali
ஜன 21, 2025 23:36

அப்பாவு சார் க்கு தெரிஞ்சதெல்லாம் தமிழ் மட்டுமே ..... குளிர் காலத்தில் வடக்கன்ஸ் கடுகெண்ணை தடவிக்குவாங்க .... பொடுகு ஒழியும்னாலும் நாத்தம் குடலைப் புரட்டும் .... அப்பாவு சார் க்கு இப்படி எதுவுமே ஒத்துவரலை ..... அதான் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு வந்துட்டார் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை