உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில அந்தஸ்திற்காக ஒமர் அப்துல்லா சுறுசுறுப்பு: நேற்று அமித்ஷா: இன்று மோடி

மாநில அந்தஸ்திற்காக ஒமர் அப்துல்லா சுறுசுறுப்பு: நேற்று அமித்ஷா: இன்று மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக டில்லியில் முகாமிட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடுகட்சி முதல்வர் ஒமர் அப்துல்லா , நேற்று (அக்.23)மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இன்று (அக்.24) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைபிடித்தது. ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார்.பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து நேற்று (அக்.23) டில்லி சென்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க தன் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மான நகலையும், துணை நிலை கவர்னர் அளித்த ஒப்புதல் நகலையும் வழங்கினார். இன்று (அக். 24) பிரதமர் மோடியை சந்தித்து தேர்தலுக்கு முன் பா.ஜ., அறிவித்துள்ளபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். முன்னர் இருந்த நிலைமை மீண்டும் தொடர வேண்டும் உள்ளிட்ட அதே கோரிக்கையை வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rpalnivelu
அக் 25, 2024 12:58

எங்க கட்டிங்க கர்ரேக்டா குடுத்திடுங்க.


Rajasekar Jayaraman
அக் 25, 2024 06:47

கஜினி முகமதுவிடம் சோமநாதர் கோவிலை திறந்து விடுவது போலத்தான் உமர் அப்துல்லாவின் மாநில அந்தஸ்து வழங்குவது.


Kasimani Baskaran
அக் 25, 2024 05:18

எல்லையோர மாநிலங்கள் அனைத்தும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசால் எந்த வித சாலை, இருப்புப்பாதை வசதிகளைக்கூட செய்யமுடியாது.


J.V. Iyer
அக் 25, 2024 04:36

வேலை நடக்க என்னவேண்டுமானாலும் செய்வாங்க.. இவைங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் அவ்வளவுதான்.


chennai sivakumar
அக் 24, 2024 22:03

இவரை நம்ப கூடாது.


சிவம்
அக் 24, 2024 21:02

மத்திய அரசிடம் காசு கேட்காமல் உன் காலில் நின்று காஷ்மீரை முன்னேற்ற வழியை பாரு. கற்கள், துப்பாக்கிகள், வெடி குண்டுகள் போன்றவை பற்றியே அறிந்த உன் மாநில இளைஞர்களுக்கு தொழில் துவங்க உதவி செய். அதற்கு மோடிஜி அரசு கண்டிப்பாக உதவும். உன் புரோபேஷன் காலம் அடுத்த ஐந்தாண்டுகள். பிறகு தனி அந்தஸ்து பற்றிய பேசலாம்.


கிஜன்
அக் 24, 2024 20:34

அப்படியே அன்னை கிட்டயும் ஒரு அட்டண்டன்ஸ் போட்ருங்க ....


புதிய வீடியோ