உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது ‛‛அக்னிகுல் ராக்கெட்

22-ம் தேதி விண்ணில் பாய்கிறது ‛‛அக்னிகுல் ராக்கெட்

சென்னை: தனியார் நிறுவனத்தின் ‛அக்னிகுல்' என்ற ராக்கெட் வரும் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், சர்வதேச நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது. அதேபோல, சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், கருந்துளையை ஆய்வு செய்ய ஏவப்பட்ட எக்ஸ்போசாட் விண்கலம் ஆகியவை இந்தியாவுக்கு விண்வெளி துறையின் மீது இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.இந்நிலையில் விண்வெளி துறையில் 100 சதவிகித அந்திய முதலீட்டை மத்திய அரசு சமீபத்தில் அனுமதித்திருந்ததையடுத்து தனியார் நிறுவனத்தின் ‛‛அக்னிகுல்'' என்ற ராககெட் வரும் 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படஉள்ளது.

சிறப்பு:

அக்னிகுல் ராக்கெட், பூமியிலிருந்து சுமார் 700 கி.மீ உயரத்தில், 100 கி.கி எடை கொண்ட செயற்கைக்கோளை கொண்டு சென்று நிலை நிறுத்தும். இந்நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு இஸ்ரோவிடம் ராக்கெட் ஏவுவது குறித்த ஒப்பந்தத்தை போட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மார் 20, 2024 07:50

இளைஞர்களுக்கு IT துறையிலிருந்து விண்வெளித்துறையில் நாட்டம் திரும்ப ஆரம்பிக்கிறது. இது ஒரு நல்ல மாற்றம். Advance wishes to the Agnikul Team. Good luck and all the very best.


மேலும் செய்திகள்