| ADDED : ஜன 10, 2024 04:49 PM
புதுடில்லி: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு இதுவரை 5,000 பரிந்துரைகள் வந்துள்ளன. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய அரசு குழுவை நியமித்துள்ளது.பொதுமக்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கூற விரும்பினால், https://onoe.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 15ம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும், அனைத்து கருத்துக்களும் உயர்நிலை குழுவால் பரிசீலிக்கப்படும் எனவும் கடந்த ஜன.,6ம் தேதி தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது வரை உயர்மட்டக் குழுவிற்கு 5,000 பரிந்துரைகள் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.