உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு; ஒரே தேர்தல் அரசியலமைப்பிற்கு எதிரானதல்ல: முன்னாள் தலைமை நீதிபதிகள்

ஒரே நாடு; ஒரே தேர்தல் அரசியலமைப்பிற்கு எதிரானதல்ல: முன்னாள் தலைமை நீதிபதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா லோக்சபாவில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, பரிசீலனைக்காக பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை பா.ஜ., எம்.பி. சவுத்ரி தலைமையிலான குழு ஆய்வு செய்கிறது. மசோதாவின் விதிகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களின் கருத்துக்களை இக்குழு பெற்று வருகிறது.இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் கேஹர் தங்கள் பரிந்துரைகளை நேற்று சமர்பித்தனர். அதில் இடம்பெற்றவை குறித்து பார்லி., வட்டாரங்கள் கூறியதாவது: மசோதாவில் சில தெளிவற்ற பகுதிகள் உள்ளன. அந்த குழப்பங்களை நீக்க வேண்டும். நெருக்கடி நிலையின் போது என்ன நடக்கும் என்பதையும் மசோதா தெளிவுபடுத்த வேண்டும். அதே சமயம் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை பாதிக்காது. மசோதாவின் விதிகளில் சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுப்பதில் பார்லிமென்ட் அல்லது மத்திய அமைச்சரவைக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு கட்டுபாடற்ற அதிகாரம் வழங்கக் கூடாது, ஆகிய பரிந்துரைகளை வழங்கினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2025 10:34

தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற சுதந்திர ஆணையமாக இருக்க வேண்டும். ஆணையத்திற்கு தேவைப்படும் நிதியை வரவு செலவு கணக்கு அடிப்படையில் மத்திய அரசு தர வேண்டும். தேர்தல் ஆணைய நடைமுறைகளில் மாநில அரசோ மத்திய அரசோ தலையிட கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தில் பணிபுரிய அனுமதிக்க கூடாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் சேர்த்தல் நீக்குதல் மற்றும் வாழ்வாதரற்காக இடம் பெயர்ந்த வாக்காளர்கள் கண்காணிப்பு ஆகிய பணிகள் வருடம் முழுவதும் நடைபெற தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் ஒரு அலுவலகம் வைத்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் எப்பொழுதும் இன்டர்நெட்டில் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் ஆகியவை தேர்தல் ஆணையம் அலுவலர்களால் நேரடியாக வாக்காளர் வசிப்பிடம் சென்று சோதித்து அந்த வாக்காளருடன் புகைப்படம் எடுத்து வாக்காளர் இருப்பிடத்தில் இருந்தே இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்து அதனை ஓர் உயரதிகாரி ஒப்புதல் பெற்ற உடன் சேர்த்தல் நீக்கல் செய்ய வேண்டும். வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஆணையத்திற்கு சொந்தமாக கட்டிடம் இருக்க வேண்டும். பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் எதிலும் வாக்கு பதிவு செய்யும் பூத்கள் அமைக்க கூடாது.


MUTHU
ஜூலை 12, 2025 07:49

எல்லாருக்குமே தங்களை விட மற்றவர்களுக்கு அதிக அதிகாரம் இருக்க கூடாதுன்னு ஒரு எண்ணம் இயல்பானதே. இப்படி செய்து செய்து தேர்தல் ஆணையம் படு கேவலமாய் ஆகிவிட்டது.


SVR
ஜூலை 12, 2025 10:20

தனக்கு இந்திய அரசியல் அமைப்பு தனக்கு கொடுக்கப்படாத அதிகாரத்தை தனக்கு உள்ளது என்று ஒரு சொல்லுக்கு உள்ள பொருளை அதற்கு நேர் எதிராக சொல்லி தனக்குத்தானே அதிகாரத்தை ஜட்ஜ்களின் நியமனத்தில் உண்டு என்று சொல்லி அதை பிரயோக படுத்துகிறதே, அது மாதிரியா? அபத்தமாய் பதிவுசெய்யக்கூடாது.


புதிய வீடியோ