உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு, ஒரே தேர்தல்: தற்போது சாத்தியமில்லை என்கிறார் சிதம்பரம்

ஒரே நாடு, ஒரே தேர்தல்: தற்போது சாத்தியமில்லை என்கிறார் சிதம்பரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமில்லை; குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போதைய ஆட்சிக் காலத்துக்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அமல்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம் கூறியதாவது: இதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ கொண்டு வருவதற்கு தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை.கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில், பிரதமர், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற வலுவான கருத்தை முன்வைத்தார். அடிக்கடி தேர்தல் நடப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையை உருவாக்குகின்றன என்று வாதிட்டார்.'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதற்கு அரசியலமைப்பு ரீதியான தடைகள் அதிகம் . அது சாத்தியமில்லை. இண்டியா கூட்டணி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை முற்றிலும் எதிர்க்கிறது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

vijay
செப் 20, 2024 14:46

இவர் தான் டிஜிட்டல் இந்தியா நாடா உரையில் சாத்தியம் ல்லை என்று சொன்னார்.


K.Rajasekaran
செப் 20, 2024 05:47

சரியாக கூறியுள்ளார்


Swaminathan L
செப் 19, 2024 13:23

என்டிஏ கூட்டணி இதை நடைமுறைப்படுத்தும். அதற்கானஅரசியல் கணக்குகள், ஃபார்முலாக்களை பாஜக ஏற்கனவே போட்டாகி விட்டது. இண்டி கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் இந்த விஷயத்தில் ஒரு பிரயோஜனமும் இல்லை.


Anantharaman
செப் 17, 2024 12:23

அவன் கிடக்கறான் விடுங்க. நாட்டில் நல்லதே நடக்கக் கூடாது இவனுகளுக்கு


veeramani
செப் 17, 2024 09:38

கண்டனுர் ஜாமீன்தாரர், ஐந்து முறை பார்லிமென்ட் உறுப்பினர் , மய்ய அரசின் அமைச்சர் ... நானும் சிவகங்கை தொகுதி செட்டிநாடு பகுதியை சார்ந்தவன். இவரை தேர்வு செய்ததற்கு வெட்கி தலைகுனிகிறேன் . இன்னும் செட்டிநாடு மக்கள் வறுமையில்தான் வசிக்கிறோம். ஒரு தொழில்வளம் இல்லை. விவசாயம் என்பது வானம் பார்த்தபூமி . சாப்பிட்டிற்கு நெல் விளைச்சல் இல்லை. ஏதோ சிறு கைகள் விளைகின்றன. இதை வைத்துதான் அரை வயிறு சாப்பிட்டு வசிக்கிறோம். இந்த நபர் அமைச்சக அதவியில் இருக்கும் ஒத்து தொகுதிக்கு ஓன்ற ம் செய்யவில்லை. எதை எடுத்தாலும் மதிப்புமிக்க மோடி அவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வது இவரின் ஒரே வேலை. இவர் ஓய்வு எடுக்க அனுப்பலாம் / பாரத தேசம் நன்கு முன்னேறும்


Arul
செப் 17, 2024 08:55

இவர்தான் சிறுவணிகர்களுக்கு UPI Payment முறை சாத்தியமில்லை என்றவர்.


Lion Drsekar
செப் 17, 2024 07:48

ஒரே நாடு ஒரே லஞ்சம் ஒரே ஊழல் ஒரே தீவிரவாதம் ஒரே ஆக்கிரமிப்பு இவைகளுக்கு மட்டுமே ஒரே அனுமதி , மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து அழகு பார்ப்பதில் ஈடுபடுவதை மறந்து, எவ்வளவு சிக்கனமாக செலவு எய்யமுடியுமோ அப்படி ஈடுபட்டால் நல்லது, மொத்தத்தில் யார் வந்தாலும் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்கப்போவது இல்லை, தேர்தல், புதிய ஆட்சி, அவர்களுக்கு வாகன வசதி, இலவச விமான இரயில் வெளிநாட்டுப்பயணம், ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் ஒன்றுகூடி வரியை ஏற்றி , தங்களுக்கு வசதிகளை பெருக்கிக்கொண்டு, வேலைவாய்ப்பு என்ற பெயரில் சம்பளத்தை அள்ளிக்கொடுத்தல், இலவசங்களைக் கொடுத்தால் , லஞ்சம், ஊழல் வழக்குகள், , மீண்டும் தேர்தல் பிரச்சாரம் இப்படித்தான் சென்றுகொண்டு இருக்கிறதே தவிர ஏழை எளியமக்கள், விவசாயப்பெருமக்கள் வாழ்வாதாரம் அப்படியேதான் இருக்கிறது . அவர்கள் அனைவரும் இரசிகர்கள் அல்லது தொண்டர்கள் என்ற பெயரில் தீனீக்களைப்போல் வளர்க்கப்படுகிறார்கள், வந்தே மாதரம்


K.Rajasekaran
செப் 17, 2024 05:45

For him anything also impossible, last time he said digital india not possible, but now a days even road side veges vendor also using digital payment, for him develop or help to his own constituency also impossible, that is why still sivaganga constituency is most under developed constituency in tamilnadu, for him only possible thing is corrupt and develop himself and his own family, country should expatriate or hang him this kind of personality....


Bhaskar Srinivasan
செப் 16, 2024 22:13

இவர் எதிர்க்கிறார் என்றால் அது நலதாகத்தான் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கலாம்


sridhar
செப் 16, 2024 22:05

Old man , shut up and retire from politics.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை