உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல்: பார்லி., கூட்டுக்குழுவில் யார் யார்?

ஒரே நாடு ஒரே தேர்தல்: பார்லி., கூட்டுக்குழுவில் யார் யார்?

புதுடில்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் இடம்பெறும் எம்.பி.,க்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், விதிப்படி ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக 269 பேர், எதிர்த்து 198 பேர் ஓட்டளித்தனர். பின், ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.இக்குழுவில் மொத்தம் 31 பேர் இடம்பெற முடியும். 21 பேர் லோக்சபாவில் இருந்தும், 10 பேர் ராஜ்யசபாவில் இருந்தும் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்நிலையில், இக்குழுவில் இடம்பெறும் லோக்சபா எம்.பி.,க்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.இதன்படி1. பி.பி.சவுத்ரி( பா.ஜ.,)2. சி.எம்.ரமேஷ்( பா.ஜ.,)3. பன்சுரி சுவராஜ் ( பா.ஜ.,)4. பர்ஷோத்தம் பாய் ரூபாலா ( பா.ஜ.,)5. அனுராக் சிங் தாக்கூர் ( பா.ஜ.,)6. விஷ்ணு தயால் ராம் ( பா.ஜ.,)7. பர்த்ருஹரி மஹ்தாப் ( பா.ஜ.,)8. சம்பித் பத்ரா ( பா.ஜ.,)9. அனில் பலுனி ( பா.ஜ.,)10. விஷ்ணு தத் சர்மா ( பா.ஜ.,)11. பிரியங்கா (காங்.,)12. மணிஷ் திவாரி (காங்.,)13. சுக்தியோ பகத் (காங்.,)14. தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி)15. கல்யாண்பானர்ஜி ( திரிணமுல் காங்.,)16. டி.எம்.செல்வகணபதி (தி.மு.க.,)17. ஹரிஸ் பாலயோகி (தெலுங்கு தேசம்)18. சுப்ரியா சுலே ( தேசியவாத காங்., சரத் சந்திரபவார் பிரிவு)19. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ( சிவசேனா)20. சந்தன் சவுகான் (ராஷ்ட்ரீய லோக் தளம்)21. பாலாஷவுரி வல்லபனேனி ( ஓய்.எஸ்.ஆர்., காங்.,) ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.இக்குழுவானது ஆய்வுக்கு பிறகு அடுத்த கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இக்குழுவில் இடம்பெறப்போகும், எம்.பி.,க்களின் பெயர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 19, 2024 11:03

இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் வரக் காரணமே காங்கிரஸ் தான். காங்கிரஸ் கட்சி தான் மாநிலங்கள் பலவற்றை தனது இஷ்டத்துக்கு கலைத்து இடை இடையே தேர்தல் நடத்த வழிவகுத்தது. காங்கிரஸ் கட்சி தான் தற்போதைய எதிர் கட்சி தலைவர் திரு.ராகுல் காந்தி அவரது தமக்கையும் எம்பியுமான திருமதி.பிரியங்கா ஆகியோரின் பாட்டியும் மற்றும் இவர்களின் தகப்பனாரும் மறைந்த பிரதமர் திரு.இராஜீவ் மற்றும் இவரது சகோதரரும் எமர்ஜென்சி நாயகன் திரு.சஞ்சய்காந்தி ஆகியோரின் தாயாருமான திருமதி இந்திரா காந்தி காந்தி என்ற பெயர் வரவேண்டும் என்பதற்காக ஃபெரோஸ் காந்தி என்பவரை திருமணம் செய்தவர். மகாத்மா காந்தி அவர்கள் குடும்பத்திற்கும் இந்த சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு.ஜவஹர் லால் நேரு மகளான இந்திராவிற்கும் நேரடி தொடர்பு இல்லை அவர்கள் தான் கலைக்கப்பட்ட மாநிலங்களின் கலைப்பு நடவடிக்கை செய்தவர். தனக்கு எதிராக எந்த மாநிலமாவது பேசினால் தற்போது திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக பேசுவது போல பேசினால் உடனே Article 370 பயன் படுத்தி மாநில அரசை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சி அமல் செய்து விடுவார். அந்த கவர்னருக்கு உதவ மூன்று IAS அதிகாரிகள் தனக்கு வேண்டியவர்களை நியமித்து விடுவார். அனைத்து மாநில அரசுகளும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு தான் கலைக்கப்படும். கவர்னர் ஆட்சி காலம் 6 மாதங்கள். வேண்டுமானால் மேலும் 6 மாதம் நீட்டிக் கொள்ளலாம். இப்படி யாகத்தான் மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உடன் நடத்த முடியாமல் போனது. மறைந்த பிரதமர் திருமதி இந்திரா அவர்கள் இது போன்று சர்வாதிகாரியாக நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இப்போதும் சட்ட சபை தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உடன் தான் நடந்திருக்கும். இன்றைய இளம் தலைமுறையினர் இதனை நன்கு அறிந்து கொள்ளவும். சட்டத்தையும் சட்ட மேதையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதியவருமான திரு.அம்பேத்கார் அவர்களை மதித்து தற்போதைய மத்திய அரசு நடந்து கொள்வதால் தான் மாநிலங்கள் கலைப்பு நடவடிக்கை எதுவும் இந்த சில காலங்களாக இல்லை.


அண்ணாமலை ஜெயராமன்
டிச 19, 2024 07:45

ஊபீஸ் கதறல் எதற்காக என்றால் அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆள முடியாமல் என்பதால். அடுத்த தேர்தலில் நீங்கள் எதிர்கட்சி தான் ஆகவே கவலை வேண்டாம். ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக ஒரு மாபெரும் சீர்திருத்தம். இதை காங்கிரஸ் கட்சியால் என்றைக்குமே செய்ய முடியாது.


கண்ணன்
டிச 19, 2024 04:50

பள்ளிப்படிப்பையே சியாக முடிக்காத பிரியங்காவா…!?


AMLA ASOKAN
டிச 18, 2024 23:08

இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மூலம் பணம் மிச்சமாகி இந்தியா மாபெரும் வல்லரசாக மாறப்போகிறதா ? 2035 தேர்தலில் இது அமுல்படுத்தப்படும் . இந்த திட்டமே BJP க்கு தோல்வியையும் தரலாம் . இது விவாதமானதால் அதானி என்பவர் பார்லமென்டிலிருந்து தப்பி ஓடி விட்டார் . 2024 கூட்ட தொடர் மோடிக்கும் பிஜேபிக்கும் சௌரியமான 10 ஆண்டுகள் கழித்து பெரிய தலைவலியை தர தொடங்கி உள்ளது . 75 வயதாகி விட்டால் ஒய்வு என்ற காரணத்தை சொல்லி மோடி ராஜினாமா செய்தாலும் செய்து விடுவார் .


பாமரன்
டிச 18, 2024 22:13

போகாத ஊருக்கு வழி சொல்ல நிலாவுல இருந்து எவ்ளோ தூரம்னு ரிசர்ச் பண்ண ஒரு வெட்டி கும்பல் அமைச்சிருக்காங்கலாம்... கொழப்பமா இருக்கா... அதானே வேணும்..... அப்பப்போ கூடி சாய் பகோடா சாப்புட்டுட்டு நல்லால்லன்னு அவிங்களுக்குள்ள சண்டை போட்டத வச்சி நாலு நாள் நியூஸ் ஓட்டலாம்... மற்றபடி இந்த மசோதா இந்தியா வல்லரசாகி கருப்பு பூச்சாண்டியை புடிச்சதும் வந்துடும்... போங்க போங்க...


புதிய வீடியோ